அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த குருப் பெயர்ச்சிக்கான பொது பலன்கள் 

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா..
அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த குருப் பெயர்ச்சிக்கான பொது பலன்கள் 

2017-ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சியான நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1189-ம் ஆண்டு ஸ்வஸ்தி் ஸ்ரீதுன்முகி வருஷம் தக்ஷிணாயனம்  வருஷ ரிது ஆவணி மாதம் 17ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 02.09.2017 சுக்ல ஏகாதசியும் சனிக்கிழமையும் உத்திர நக்ஷத்ரமும் சௌபாக்கியம் நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.31 என்றால் காலை 9.21-க்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறுகிறார்.

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா...உதாரணமாக ஒருவருக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, வியாழ நோக்கம் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதைத் தான் முதலில் பார்ப்போம். 

குருப் பகவானை வைத்து தான் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை ஒருவருடைய ஜாதகத்தில் கணிக்கப்படும். தனகாரகன், சந்தானகாரகன், சுபகாரகன் இது போன்ற பெயர்கள் குருபகவானுக்கு உண்டு. 

குருபகவானின் அதிதேவதை பிரம்மா. அதனால் தான், யாருக்கெல்லாம் குரு பகவானுடைய பலன் குன்றிக் காணப்படுகிறதோ அவர்கள் பிரம்மாவை வணங்க வேண்டும் என்று ஜோதிடர்கள் வலியுறுத்துகின்றனர். திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பட்டூர் பிரம்மாவுக்குச் சிறப்பு தலமான கருதப்படுகின்றது. 

துலா ராசிக்கு பிரவேசம் ஆகக்கூடிய குருபகவான் 5-ம் பார்வையாக கும்ப ராசியையும், 7-ம் பார்வையாக மேஷ ராசியையும், 9-ம் பார்வையாக மிதுன ராசியையும் பார்க்கிறார். எல்லா கிரகத்துக்கும் 7-ம் இடத்தை பார்க்கக்கூடிய ஒரு வலு உண்டு. அதில், செவ்வாய், குரு, சனிக்கு சில சிறப்பு பார்வைகள் உண்டு. குருபகவானை பொறுத்தவரை 5, 7, 9 ஆகிய பார்வைகள் உண்டு.

குருப்பெயர்ச்சியின் மூலமாக அதிக நன்மை பெறும் ராசிகள்

மேஷம் - மிதுனம் - கும்பம் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் மிகவும் நல்ல பலன்களை அடைவிருக்கின்றன.. 

நன்மை தீமை கலந்து பெறும் ராசிகள்

கடகம் - கன்னி - துலாம் - தனுசு - மகரம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கும் நன்மை தீமைகள் இரண்டும் கலந்து பலன்களை அனுபவிக்க உள்ளனர். 

பரிகாரத்தின் மூலம் பலன் பெறும் ராசிகள்

ரிஷபம் - சிம்மம் - விருச்சிகம் - மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களும் பரிகாரத்தின் மூலம் நல்ல பலன்களை அனுபவிக்க போகிறார்கள். 

இப்போது நாம் பார்த்த அனைத்தும் பொதுவான பலன்களே தவிர, அவரவரின் ஜாதகப்படி சதாபுத்தியின் படி அனுகூலமான திசை நடந்தால் நல்ல யோகமான பலன்களையும், அஷ்டமாதிபதி, விரையாதிபதி திசை நடைபெறும் போது ஓரளவு நல்ல பலன்களையும் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் பெற முடியும். 

குரு பகவானின் நிறம் - மஞ்சள்

குரு பகவானுடைய ரத்தினம் - மஞ்சள் கனக புஷ்பராகம்

குரு பகவானுடைய உலோகம் - தங்கம்

குரு பகவானுடைய திசை - வடக்கு

நட்பு கிரகங்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன்

சம கிரகங்கள் - சுக்ரன் (தேவகுரு, அசுர குரு)

இந்த குருப்பெயர்ச்சியானது ஆவனி மாதம் 17-ம் தேதி செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்று, அதோடு அடுத்த வருடமான விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 19-ம் தேதி அதாவது 04.10.2018 வரை குருபகவான் துலா ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

குருபகவான் 14.02.2018 முதல் அதிசாரம் பெறுகிறார்.  

குருபகவான் 04.07.2018 அன்று வக்ர நிவர்த்தி பெற்று விசாக நட்சத்திர மூன்றாம் பாதத்தில் சாரம் பெற்று மீண்டும் துலா ராசிக்கு திரும்பி நேர்கதியில் பயணிக்க உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com