இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே போர் வருமா? என்ன சொல்கிறது குருப்பெயர்ச்சி பலன்? 

இந்தாண்டு நிகழ உள்ள குருப்பெயர்ச்சியால் லோகம் எப்படி இருக்கும்?  அதாவது லோக பலன் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்....
இந்தியா-சீனா நாடுகளுக்கிடையே போர் வருமா? என்ன சொல்கிறது குருப்பெயர்ச்சி பலன்? 

2017-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி ஆவணி 17-ம் தேதி, செப்டம்பர் 02-ம் தேதி நிகழ உள்ளது. இந்நிலையில் இந்தக் குருப்பெயர்ச்சியால் லோகம் எப்படி இருக்கும்? அதாவது லோக பலன் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவல்.......

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்களிடம்.... தற்போது உள்ள சூழ்நிலையில் இந்தியா - சீனப் போர் வருமா? என்ற கேள்விக்கு வராது, தற்போது அதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், குரு பெயர்ச்சிக்குப் பிறகான காலகட்டத்தில் ராஜாங்க ரீதியில் அதிக அன்னியோன்யம் ஏற்பட்டு முடிவு மக்களுக்குச் சாதகமாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். 

12.02.2019-க்குப் பிறகு கேது சனியுடன் தனுசு ராசியில் இணையும் போது மிதுன ராசியில் இருக்கும் ராகுவிற்கு சனி பார்வை ஏற்படும். அந்தச் சமயத்தில் மிகப் பெரிய போர் அபாயம் உலக நாடுகளில் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு போர் ஏற்பட்டாலும், குருவின் சார பலனால் மிகப் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படுத்தாமல் தவிர்க்கப்படும் என்றார். 

12.02.2019 முதல் 10.10.2020 வரையில் சில காலம் ராகு மிதுன ராசியில் சுய சாரம் பெறும் காலகட்டத்தில் சனி பகவான் சூரியன் சாரத்தில் இருப்பார். ராஜாங்க ரீதியாக ஏமாற்று வேலைகள் மற்றும் சொல்லொன்றாத் துயரம் நிறைய நடக்கும். உதாரணமாக ஆயுத கொள்முதலில் ஊழல் தொடங்கி கைது செய்யப்படும். கைதிகளை மனித உரிமை மீறல் வரை நிறைய நடக்கும். அரபு நாடுகளில் பிரச்னைகள் அதிகமாகும். அமெரிக்காவிற்கு இந்தக் காலகட்டம் போராட்டமாகவும் அதிக பிரச்னையான காலகட்டமாக அமையும். இது வரப்போகும் காலம் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com