ஜென்ம சனி அப்படி என்னதான் செய்யும்!

ஜென்ம சனி அப்படி என்னதான் செய்யும்!

சனி பகவான் ஒரு ராசியில் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவரின் ராசியிலிருந்து பன்னிரெண்டாம் ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது...

சனி பகவான் ஒரு ராசியில் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒருவரின் ராசியிலிருந்து பன்னிரெண்டாம் ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது விரய சனிகாலம் என்றும், ஜென்ம ராசியில் அதாவது ஒன்றாம் ராசியில் சஞ்சரிப்பதை ஜென்ம சனி என்றும் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது பாத சனி என்றும் ஏழரை ஆண்டு சனி காலம் உள்ளது.

இதுவரை, சனிபகவான் சஞ்சரித்து வந்த விருச்சிகராசி அவரின் பகை வீடாகும். இனி சஞ்சரிக்கப்போகும் தனுசு ராசிக்குரிய குருபகவான் சனிபகவானுக்கு சமம் என்கிற அந்தஸ்தில் இருப்பதால் இங்கு, அவர் மகிழ்ச்சியோடு சஞ்சரிப்பார். சரி, ஜென்ம சனியால் நன்மை ஏற்படுமா? தீமை ஏற்படுமா? என்பதைப் பார்ப்போம். 

ஜென்ம சனியால் நன்மையா? தீமையா?

சமுதாயத்தில் மதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள் கூட ஜென்ம சனி காலத்தில் தேவையில்லாத விமர்சனத்தால் மனத்துயரம் அடைவார்கள். தன் சகோதரர்களோடு தேவையில்லாமல் பகைமையை வளர்த்துக் கொள்வதுடன் அவரை பகையாளிகளாக எண்ணுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேல் அதிகாரிகளிடம் சாதகமான சூழல் அல்லாமல் பாதகமான சூழல் ஏற்பட்டு தன்மான இழப்பு போன்றவற்றை ஏற்படுத்துவார். மேலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எல்லாப் பணிகளையும் தானே செய்வது போன்ற நிலை அமையும்.

செய்தொழில் புரிவோருக்கு உற்பத்திக்கான விற்பனை இல்லாமல் தொழிலில் தேக்க நிலை உண்டாகும். தொழில் பயணங்களால் லாபம் இருக்காது. ஆடை அணிகலன்களால் தன விரயம் அல்லது வீட்டில் திருட்டு போதல் போன்றவை நிகழும். அதனால் சில விபரீத சிந்தனைகளை ஏற்படுத்துவார். கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் மற்றும் பிள்ளைகளை விட்டுப் பிரிதல் போன்ற குடும்ப பிரச்னைகளால் நிம்மதியின்மை போன்ற சூழல் ஏற்படும். 

கூட்டுத்தொழிலில் சக பங்குதாரர்களிடம் வாக்குவாதத்தினால் பங்குதாரர்களுக்கு இடையே பிரிவினையும், மனக்கசப்பு மற்றும் வருத்தம் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை நிகழ்த்துவார். சரியான வேலை அமையாமலும், வேலையில்லா நிலையும் ஏற்படுத்தி எண்ணங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவார். எதிலும் சுறுசுறுப்பு இன்றி மந்த நிலையை ஏற்படுத்துவார். தீயோர்களின் நட்புகள் எளிதில் அமையப்பெற்று நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார். தீய பழக்கங்களால் உடல் பலவீனத்தை ஏற்படுத்தி சோம்பேறி என்ற பெயருக்கு உரியவராக மாற்றுவார்.

நெருக்கமான உறவினர்களை இழத்தல் அல்லது அவர்களால் ஏமாற்றப்பட்டு அவர்களிடமிருந்து பிரிந்து வாழக்கூடிய வேதனையான நிலையை அளித்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யார் என்பதையும் உங்களின் நிலை அவர்களிடம் என்ன என்று உங்களுக்கு புரியும் வகையில் புரிய வைக்கக்கூடியவர். காரியத் தடை, கீர்த்தி பங்கம் போன்ற பல சோதனைகள் ஏற்படுத்தி நம் வாழ்க்கை என்னவென்று புரிய வைக்கக்கூடிய நீதிமான்.

பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும். 

சிறப்பு பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும். 

சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com