நாம் செய்யாததை தினமும் செய்து அசத்தும் அதிசய காட்டு யானை!

கர்நாடக மாநிலம், பந்திப்பூர் தேசிய பூங்காவில் உள்ள பழமையான ஹிமாவத் கோபால சுவாமி கோயிலில் தினமும் காட்டு யானை ஒன்று....
நாம் செய்யாததை தினமும் செய்து அசத்தும் அதிசய காட்டு யானை!

சாமராஜ்நகர்: கர்நாடக மாநிலம், பந்திப்பூர் தேசிய பூங்காவில் உள்ள பழமையான ஹிமாவத் கோபால சுவாமி கோயிலில் தினமும் காட்டு யானை ஒன்று கோயிலை சுற்றி வந்து பிரசாதம் வங்கி செல்லும் காட்சி அங்குள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பந்திப்பூர் தேசிய பூங்காவில் யானை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதியில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த ஹிமாவத் கோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மாலை நேர பூஜை நடைபெறும் போது யானை ஒன்று கோயில் பிரகாரத்தை வலம் வந்து தினமும் பூசாரியிடம் பிரசாதம் பெற்றுச் செல்கிறதாம். 

இதுகுறித்து அங்குள்ள பக்தர்கள் கூறும் போது, நாம் வளர்க்கும் யானைகள் கோயிலுக்கு வருவதுண்டு. ஆனால், காட்டு யானை ஒன்று தினமும் கோயிலுக்கு வருவது வியப்பளிக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த யானை பூஜை முடியும் வரை ஆடாமல், அசையாமல் கோயில் வாசலில் நிற்கிறதாம். பின், கோயிலை வலம் வந்து பூசாரி கொடுக்கும் தேங்காய், வாழைப்பழத்தைப் பெற்று செல்கிறதாம். 

இந்த யானையால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இதுவரை ஏற்பட்டதில்லையாம். கடந்த இரண்டு வாரங்களாகத் தினமும் வந்து கோபால சுவாமியின் ஆசீர்வாதத்தை பெற்றுச் செல்கின்றது. இது, அங்குள்ள அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. யானையின் இந்த செயலைக் காண, நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாகப் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com