சனிபகவானின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உகந்த விரதம் இதுதான்!

நவக்கிரகங்களில் நாம் அதிகமாகப் பயப்படுவது சனிபகவானுக்கு மட்டும்தான். இவர் நம்மைப் பிடித்துக்கொண்டு என்னவெல்லாம் செய்வாரோ என்கிற பயமும் உண்டு.
சனிபகவானின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உகந்த விரதம் இதுதான்!


நவக்கிரகங்களில் நாம் அதிகமாகப் பயப்படுவது சனிபகவானுக்கு மட்டும்தான். இவர் நம்மைப் பிடித்துக்கொண்டு என்னவெல்லாம் செய்வாரோ என்கிற பயமும் உண்டு. சனிதோஷம் உள்ளவர்கள் இந்த விரதத்தினை பின்பற்றினால் தோஷத்தின் தாக்கம் குறையும்.

சனிபகவானுக்கு உகந்த விரதங்கள்!

* சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து சனிபகவான் ஸ்தோத்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும். காக்கைக்கும், ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும்.

* எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து வேங்கடேசப் பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து வணங்கலாம்.

* சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது அதனைத் தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம்.

* சனிக்கிழமைகளில் சனிபகவான் கோவிலில் ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக ஆக்கி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றலாம்.

* சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீல நிற வஸ்திரம் சாத்தி, எள் சாதம், வடைமாலை செய்து வழிபாடு செய்து அனைத்தையும் அர்ச்சகர், அந்தணர், ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

* சனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து அபிஷேக, ஆராதனைகளும் செய்து தொடர்ந்து மண்டல பூஜை செய்யலாம்.

* அவரவர்களது பிறந்த ஜென்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மைகளைத் தரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com