ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள் 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளான இன்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பவர் 18-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளான இன்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமான் மூலஸ்தானத்தில் இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்ந்தனர். 

இதையடுத்து, நாளை பாமபதவாசல் திறக்கப்படுகிறது. வியாழக்கிழமை(இன்று) இரவு 12 மணிக்கு மேல் ரங்கா கோபுரம் வாயிலில் மேற்கு, கிழக்கு, நடுப்பகுதி என வரிசை தடுப்புகள் வழியாக முன்னுரிமை அடிப்படையில் கட்டணமில்லா தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பரமபத வாசல் திறப்பிற்கு பின்னர் பரமபதவாசல், மூலவர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com