கே.சி.எஸ் ஐயரின் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 (சிம்மம் முதல் விருச்சிகம்)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் 2018-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களில் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ஆகிய ராசிக்கான பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.
கே.சி.எஸ் ஐயரின் ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2018 (சிம்மம் முதல் விருச்சிகம்)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் 2018-ம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களில் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ஆகிய ராசிக்கான பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலன்பெறுங்கள். 

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் சீராகவே தொடரும் என்றாலும் பேராசைக்கு இடம் தராமல் பணியாற்ற வேண்டும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளும் அவர்கள் தீட்டும் சதித்திட்டங்களும் உங்களை கலக்கமுற செய்யும். அதோடு நன்கு யோசித்த பிறகே மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கவும். 

மற்றபடி பெரிய கடன்களில் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவீர்கள். நெடுங்காலமாக தொந்தரவு கொடுத்து வந்த உடற்கோளாறுகள் தீர்ந்து உடல்நலம் மேம்பாடு அடையும். சோம்பல் அறவே நீங்கி சுறுசுறுப்புடன் காரியமாற்றுவீர்கள். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சமூகத்தில் சிறப்பான கௌரவம் அந்தஸ்தும் கிடைக்கும். செய்தொழிலில் புதிய உத்வேகத்துடன் இறங்குவீர்கள். உடன்பிறந்தோர் மூலம் தேவையான ஆதரவைப் பெறுவீர்கள். விஷயங்களைப் புரிந்து கொண்டு சரியான வார்த்தைகளை பயன்படுத்துவீர்கள்.  இல்லத்தில் திருமணம் போன்ற சுய காரியங்களும் குழந்தைப்பேறும் உண்டாகும். பூர்வீக வழி சொத்துகள் சிரமமில்லாமல் கைவந்து சேரும். சமூகத்தில் உயர்ந்தோர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். சிலர் புதிய வீடு வாங்கி நூதன கிரகப்பிரவேசம் செய்யும் காலகட்டமாக இது அமைகிறது. 

ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அவசர புத்தியினால் சிறிய தவறுகளைச் செய்தாலும் கடைசி நேரத்தில் அவைகளிடமிருந்து விலகி விடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் தானாகவே விலகி விடும், ஓய்வில்லாமல் காரியமாற்றிக்கொண்டே இருப்பீர்கள். செய்தொழிலில் அனுதினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். உங்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேறும். ஆபத்துகளை சூட்சும புத்தியால் கண்டறிந்து அதைக் கடந்து வந்து விடுவீர்கள்.  குடும்பத்தில் அமைதி நிலவும். தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும் நடையில் கம்பீரமும் உண்டாகும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை வரிசைப்படுத்தி காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பணவரவு குறித்த நேரத்தில் கைவந்து சேரும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.  பொருளாதார நிலையில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடுவது நன்மை தரும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு பொருள்களின் விலையை நிர்ணயித்து லாபங்களைப் பெறுவீர்கள். பழைய கடன்களிலிருந்து விடுபடும் சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். புதிய கால்நடைகளை வாங்கிப் பயனடைவீர்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களையும் திருப்பிச் செலுத்தும் ஆண்டாக இது அமையும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும் . வழக்குகள் முடிய தாமதமாகும்.

அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயரும் புகழும் உண்டாகும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவீர்கள். புதுத்தெம்புடன் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிர முயற்சிகளைச் செய்ய வேண்டிவரும். சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சக கலைஞர்களின் உதவியால் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடன் உறவு நன்றாக இருக்கும். உற்றமும் சுற்றமும் அனுகூலமாக இருப்பார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். தாய் வீட்டுச் சீதனமும் வந்து சேரும். உங்கள் பெயரில் அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உள்ளது.

மாணவமணிகள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவார்கள். பெற்றோர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். விளையாட்டில் புதியவைகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் குதூகலம் நிறையும். நெடுநாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த  சுப நிகழ்ச்சிகள் தானாகவே நடந்தேறி விடும். வெளிவட்டாரத் தொடர்பினால் உங்கள் கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும்.

உங்கள் பேச்சினால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த உடல் உபாதைகள் மறைந்துவிடும். அரசாங்கத்தில் உயர்பதவிகளில் உள்ளவர்களிடம் தொடர்பு உண்டாகும். செய்தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபட்டு மேன்மை அடைவீர்கள். ஏமாற்றங்கள் மறைந்து ஒரு சிறப்பான மாற்றத்தை எதிர்நோக்கி பயணப்படுவீர்கள். கடினமான சூழ்நிலைகளிலும் அவசரப்படாமல் ஆராய்ந்து நிதானமாக முடிவெடுப்பீர்கள். 

பூர்வீக வழியில் அதிர்ஷ்ட கதவுகள் திறக்கும். வரவே வராது எனறு நினைத்திருந்த கடன்கள் கைவந்து சேரும். குழந்தைகளை வெளிநாட்டுக்கு, வெளியூர்களுக்கு அனுப்பி படிக்க வைக்கும் வாய்ப்புகளும் உண்டாகும். பழைய வண்டி, வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். மார்பு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கும் ஆளாவீர்கள். அதனால் கவனமாக இருக்கவும். நண்பர்களிடம் கோபப்படாமல் நடந்து கொண்டு அவர்களின் உறவை நல்ல முறையில் தக்கவைத்துக் கொள்ளவும். 

ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் எண்ணங்கள் சிறகடித்து பறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க காண்பீர்கள்.  உங்கள் மனவருத்தங்களை வெளிகாட்டாமல் வலம் வருவீர்கள். சுதந்திரமாக சிந்தித்து தனித்து செயல்படுவீர்கள். நேர்முக எதிரிகள் திடீரென்று விலகி விடுவார்கள். புதிய உறவுகள் மலர காண்பீர்கள். அவர்கள் உங்கள் செயலுக்கு அரணாக இருப்பார்கள். சிலர் புதிய திட்டங்களை செயலாக்குவீர்கள். வருமானம் சிறக்கும் என்பதால் புதிய சேமிப்புத் திட்டங்களிலும் செயல்படுவீர்கள். எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வீண் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். தந்தை வழியிலிருந்தும் சில அனுகூலங்கள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்கள் பெறுவார்கள். உங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் உண்டாகுமாகையால் அவர்களிடம் கவனமாக நடந்து கொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து அவர்களின் பிரச்னைகளை வளர விடாதீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டையும் பெறுவீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவர் என்ற பெயரையும் எடுப்பீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். கூட்டாளிகளை அரவணைத்துச்செல்லவும். புதிய சந்தைகளை நாடிச் செலவும் போது அதிக கவனம் எடுக்கவும். மேலும் அரசு விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். கொள்முதலிலும் அதிக லாபங்களைக் காண்பீர்கள். பொருள் வரவு சிறப்பாக இருக்குமாகையால் பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி செலுத்துவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடி வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். மறைமுக எதிர்ப்புகள் அகலும். கலைத்துறையினருக்கு மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் திறமைகள் பளிச்சிடும். தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களால் நெடுநாளைய கனவு பலிக்கும்.

பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமைகளைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்து கொண்டு குழப்பமான சூழ்நிலைகளைத் தவிர்ப்பீர்கள்.

மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பீர்கள்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}​
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த 2018 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். தாய் வழியின் மூலம் நன்மைகள் கூடும். அன்னை வழி உறவினர்களுடன் விட்டுப் போயிருந்த உறவுகள் திரும்ப வந்து சேரும். அவர்களுக்கு நீங்கள் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். உள்நாட்டு பயணங்களை அதிகமாக செய்வீர்கள்.

உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படலாம். அதனால் சரியான நேரத்தில் ஆகாரத்தை எடுத்துக் கொள்ளவும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் எண்ணங்கள் போல் செயல்கள் நடக்கும். அனைத்து விஷயங்களிலும் நல்லதையே பார்ப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் வரவுகளை எதிர்காலத்துக்கு சேமித்துக் கொள்வீர்கள். எதிரிகள் ஒதுங்கிச் செல்வர்.  போட்டிகளையும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். கடிதம் மூலம் மகிழ்ச்சிகரமான செய்தி வரும். தெய்வீகம் உங்கள் வாழ்க்கையில் இரண்டற கலந்திருக்கும் காலகட்டமிது.

ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் புத்தி சாதுர்யம் கூடும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். குழந்தைகளால் மேன்மை அடைவீர்கள். நெடுநாள் விற்காமல் இருந்து வந்த சொத்து நல்ல விலைக்கு விற்பனையாகும். வருமானம் வந்துகொண்டிருந்தாலும் செலவுகளும் சேர்ந்தே தொடரும். 

அதனால் அத்தியாவசிய செலவுகள் மட்டுமே செய்து கையிருப்பைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சிலர் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். எவரையும் வீண் சந்தேகப்படுவது நன்மை தராது. அனைத்து விஷயங்களிலும் நிதானமாக செயல்படவும். பெரிதாக மனக்கோட்டைகள் கட்ட வேண்டாம். குடும்பத்தாருடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மகான்களின் சந்திப்பு மூலம் மன அமைதியும் கிட்டும். வம்பு வழக்குகளில் சாதகமான திருப்பங்கள் உண்டாகும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை உருவாக்கித் தரும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு, ஊதிய உயர்வு ஆகிய இரண்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும் மனதிலிருந்த தெளிவின்மையும் அகன்று மிடுக்குடன் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஒழுங்காக நடக்கும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களுக்கு உள்ளாவீர்கள். கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலர் கூட்டாளிகளை விட்டொழித்து தனியாகத்தொழில் தொடங்கும் ஆண்டாக இது அமைகிறது. விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். புதிய குத்தகைகளால் லாபம் கொட்டும். விளை நிலங்கள் வாங்குவீர்கள். சேமிப்புகளும் உயரும். பால் வியாபாரத்தாலும் கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். வழக்குகள் சாதகமாகும். 

அரசியல்வாதிகள் கஷ்டப்படாமல் காரியமாற்றலாம் என்று நினைத்து செயலில் இறங்குவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பானது. இதனால் உழைப்பை கூட்டிக்கொள்ளுங்கள். கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். உங்கள் சொல்லுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு கூடினாலும் தொண்டர்கள் உங்களிடம் நிறைய எதிர்பார்ப்பார்கள். கலைத்துறையினருக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். உங்களைத் தேடி புதிய வாய்ப்புகள் வந்து சேரும். திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் தேடி வரும். பொருளாதார வசதி மேம்படும்.

பெண்மணிகள் குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். உறவினர்கள் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். மேலும் குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். கணவர் உங்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்.  

மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள். ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.
{pagination-pagination}​

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)இந்த 2018

ஆம் ஆண்டு  ஜூன் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் சற்று தொய்வு நிலை உண்டானாலும் இதனால் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. செய்தொழிலிலும் சிறிது சுணக்கங்கள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த நிறைய பயணங்களைமேற்கொள்வீர்கள்.  எடுத்த காரியங்கள் அலைச்சல் திரிச்சலுக்குப்பிறகே முடிவடையும். தாய்வழியில் சில சோதனைகளும் மருத்துவ செலவு செய்யும் நிலைமையும் உண்டாகும்.  

சோம்பலுக்கு இடம் தராமல் கடின உழைப்பை மேற்கொள்ளவும்.  மேலும் எந்தச் செயலையும் பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போடாமல் உடனுக்குடன் முடிக்கவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக்கொள்வீர்கள். அதனால் நாவடக்கம் அவசியம். உங்கள் முன்னேற்றமான எண்ணங்கள் உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். புதிய பொறுப்புகளை திட்டமிட்டு நடத்துவீர்கள். மனதில் காரணமில்லாமல் இருந்த வருத்தங்களும் குழப்பங்களும் நல்ல முறையில் தீர்ந்துவிடும். 

ஜூலை மாதம் முதல்  இந்த ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களை படபடவென்று முடித்து விடுவீர்கள். உயர்வான பதவிகளும் புகழ் செல்வாக்கு ஆகிய அனைத்தும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை ஆகியவை உயரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடிவடையும். உங்களின் எண்ணங்களும் செயல்களும் உங்களை உயர்த்தும். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உடன்பிறந்தோர் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். பயணங்களால் சிலருக்கு திடீர் குருட்டு அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும் அரசாங்க உதவிகள் கேட்காமலேயே கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

உத்தியோகஸ்தர்கள் முன்னேற்ற பாதையில் பயணிப்பார்கள். அலைச்சல் திரிச்சல் இல்லாமல் உங்கள் வேலைகளைச் சரியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களுடன் சுமுக நிலையை கடைபிடிப்பது அவசியம். வீண் பேச்சுக்களால் குழப்பங்கள் ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வு கிடைத்து சாதனை செய்ய விழைவீர்கள். மேலதிகாரிகளிடம் வெளிப்படையாகப் பழகவேண்டாம். வியாபாரிகள் சுக சௌகர்யங்களைப் பாராமல் கடினமாக உழைப்பார்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செய்தால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம்.  விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும் ஊடுபயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவார்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்குவீர்கள். புதிய குத்தகைகளை யோசித்து வாங்கவும். பொறுமையுடன் கடன்களைப் பெற்று எதிர்காலத்திற்கு வித்திடவும். குடும்பத்தில் ஒன்றிரண்டு சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகள் கட்சியின் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியங்களை அம்பலப்படுத்துவீர்கள்.  

கலைத்துறையினர் தேவையான வருமானத்தைக் காண்பார்கள். கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று வருவீர்கள்.  ரசிகர்களின் ரசனைக்கு மதிப்பு கொடுப்பீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது சிறிது யோசித்து எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைச் செய்து கைப்பொருள்களைக் கரைக்க வேண்டாம். பேசும்போது கடும் சொற்களை உதிர்க்க வேண்டாம். 

மாணவமணிகளுக்கு படிப்பில் சிரத்தை குறைந்து காணப்படும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனைகள் அறிவுரைகள் கேட்டு நடக்கவும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com