மூல நட்சத்திரக்காரர்களா நீங்கள்? அப்போ கண்டிப்பாக படியுங்கள்...

ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. ஒரு குழந்தை பிறக்கும் போதே.....
மூல நட்சத்திரக்காரர்களா நீங்கள்? அப்போ கண்டிப்பாக படியுங்கள்...

ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான் அமைகிறது. ஒரு குழந்தை பிறக்கும் போதே, அந்தக் குழந்தையின் ராசி, நட்சத்திரம், நேரம் ஆகியவற்றைக் கணித்து கொண்டு பிறக்கும். இதன் அடிப்படையிலேயே குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்காக ஜாதகம் ஒன்றை ஜோதிடர்கள் தயாரிப்பார்கள்.

பொதுவாக நட்சத்திரப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் காணப்படும். அவர்களுடைய வாழ்க்கை முறையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதிலும் மூலம் நட்சத்திரம் என்றால் அனைவரும் கவலை கொள்வார்கள் அதற்குக் காரணம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எனச் சாஸ்திர சம்பிரதாயம் அதிகமாகக் காணப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி 27 நட்சத்திரங்களில் 17-வது இடத்தைப் பெறுவது மூல நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவான். இது ஒரு பெண் நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. மூலம் தனுசு ராசிக்குரியதாகும். இது இடுப்பு, தொடை, நரம்புகள் போன்றவற்றை ஆளுமை செய்கிறது.

மூல நட்சத்திரக்காரர்கள் என்றால் நினைவுக்கு வருவது ஆணி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம் என்ற பழமொழி தான். அதற்கான பொருள் ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரல் பிறப்பவர்களுக்கு சௌபாக்கியங்கள் கூடி வரும். ஏனென்றால் ஆனி மாதத்தில் சூரியன் மிதுனத்திலும், சந்திரன் தனுசு ராசியிலும் இருக்கும். ஆனால் பின்னாளில் இது மறுவி, ஆண் மூலம் அரசாளும் என்றும், பெண் மூலம் நிர்மூலம் என்றும் மக்களை அச்சுறுத்தும் நட்சத்திரமாகவே மூலம் மாறிவிட்டது.

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் பல்வேறு வகையான பிரச்னைகளை தினமும் சந்தித்து வருகின்றனர். அதற்கான காரணங்கள் கிரக நிலைகளின் அமைப்பு தான். என்னதான் நல்ல நட்சத்திரத்தில் பிறந்தாலும் கெட்ட கிரகங்களின் தசா புத்திகள் நடக்கும்போது நல்ல குணத்தில் இருந்து மாறிக் கெட்ட நடவடிக்கைகள் இருக்கும். கெட்ட சகவாசத்தினால் தன்நிலை மறந்து செயல்படுதல் நிலை

ஏற்படும். ஆனால், மூல நட்சத்திரத்தில் பிறந்ததால் தான் இவ்வாறு நிகழ்கின்றது என்று கூற முடியாது. நமக்குள்ள தசாபுத்தி மற்றும் கிரகநிலையின் அடிப்படையிலேயே நன்மை, தீமைகள் நடைபெறும்.

சரி, மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிரக நிலை சரியாக இல்லாமல் இருந்தால் வணங்க வேண்டிய தெய்வங்களை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்...!

மூலம் நட்சத்திரம் முதல் பாதமாக இருப்பின்,
நாமக்கலில் அருள்பாலிக்கும் ஸ்ரீநாமகிரித் தாயார் உடனுறை, ஸ்ரீநரசிம்மரையும், ஸ்ரீ ஆஞ்சநேயரையும் வணங்குதல் நல்லது. இதனால், நமக்கு ஏற்பட்ட பிரச்னைகள் படிப்படியாக அகலும்.

மூலம் இரண்டாம் பாதமெனில்,
திருநீர்மலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅணிமாமலர் மங்கை உடனுறை ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாளை வணங்குதல் நல்லது. வாழ்வில் உள்ள சங்கடங்கள் நீங்கி மனநிம்மதி கிடைக்கும்.

மூலம் மூன்றாம் பாதம் எனில்,
திருவதிகையில் அருள்பாலிக்கும் ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ வீரட்டேஸ்வரரை வணங்குதல் நல்லது. குடும்பத்தில் உள்ள சூழ்நிலைகள் மாறி நல்லது நடக்கும்.

மூலம் நான்காம் பாதமாக இருந்தால்,
திருச்சியில் உள்ள சமயபுரத்தில் ஆட்சி செய்யும் மாரியம்மனைப் பஞ்சமி திதியன்று வணங்குதல் நல்லது. உங்கள் வாழ்க்கை நலம் பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com