உங்கள் பெயர், புகழ் மேம்பட இந்த நாளில் இதைச் செய்யுங்கள்....

யாருக்குத் தான் போராட்டமில்லாத, துன்பமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை இருக்காது....
உங்கள் பெயர், புகழ் மேம்பட இந்த நாளில் இதைச் செய்யுங்கள்....

யாருக்குத் தான் போராட்டமில்லாத, துன்பமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை இருக்காது, நம் அனைவருமே நல்ல பெயருடனும், புகழுடனும், செல்வத்துடனும் வாழத் தான் விரும்புவோம். ஆனால் பலருக்கும் அது வெறும் கனவாகவே அமைந்துவிடும். மேலும், நாம் பிறந்த நேரம், நாள், ராசி போன்றவை நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறது. அதில், சிலர் வெற்றியை எளிதாகவும், சிலர் மிகவும் கடுமையாக பாடுபட வேண்டியதாகவும் இருக்கும்.

ஆனால், நம் புனித நூல்கள் ஒருவரது பெயர், புகழ், செல்வம் போன்றவை மேம்பட ஜோதிட ரீதியாக ஒரு சில ரகசியங்களைக் கூறுகிறது. ஒருவர் அவற்றை, திங்கள் முதல் ஞாயிறு வரை பின்பற்றி
வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஞாயிற்றுக் கிழமையன்று ஒருவர் வெற்றிலை போட்டாலோ அல்லது வெளியே செல்லும் போது ஒரு வெற்றிலையை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்வதோ மிகவும் நல்லது. பொதுவாகவே வெற்றிலைக்கு ஈர்ப்பு தன்மை அதிகம். எனவே, அன்று செய்யும் அனைத்து முயற்சிகளும் சாதகமாக அமையும்.

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை எப்போதும் சிறப்பாக இருக்க, வீட்டின் நுழைவாயிலைப் பார்த்தவாறு, ஒரு கண்ணாடியை வைத்து வெளியே செல்லும் போது அந்தக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். குறிப்பாக இப்படி கண்ணாடி வைக்கும் போது, அது நீள்வட்ட வடிவில் இருந்தால் இன்னும் நல்லது. மேலும் இது, வீட்டின் திருஷ்டியை போக்கவும், தீய சக்திகள் வீட்டிற்குள் அண்ட விடாமல் நம்மைப் பாதுகாக்கவும் செய்கிறது.

இந்து மதத்தில் செவ்வாய் கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக அர்ப்பணிக்கப்படுகிறது. இந்நாளில் அனுமன் மந்திரங்களை காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு முன் சொல்வது நல்லது. மேலும், இந்நாளில் வெளியே செல்லும் முன் வாயில் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிதளவு சாப்பிட்டுச் செல்லுங்கள். இதனால், அன்று நடைபெறும் காரியங்கள் அனைத்தும் மனத்துக்கு இனிமையாக அமையுமாம்.

புதன் கிழமைகளில் புத பகவானே நான் இன்று மேற்கொள்ளும் முக்கியமான வேலையை முன் நின்று ஜெயமாக முடித்துத் தருவீர் என்று மனதார நினைத்து, புதினா அல்லது துளசியை சிறிது வாயில் போட்டுக் கிளம்பினால், அன்றைய நாளில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வியாழக் கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் குருவே இன்று நிகழும் அனைத்தையும் சுபமாக்கிட எனக்கு அருள் புரிவாய் என்று பிரார்த்தனை செய்து, மஞ்சள் நிற ஆடையோ, அல்லது மஞ்சள் கலந்த கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள் பின்னர், வாயில் சிறிதளவு சீரகம் அல்லது கடுகை போட்டுச் செல்லுங்கள். அன்றைய நாளில் நிகழும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமிக்கு வில்வம் செலுத்திவிட்டு, தயிரை சிறிது வாயில் போட்டு செல்வதினால் அன்று நாம் நினைக்கும் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும் என்பது சாஸ்திரம் கூறுகிறது.

பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் வீட்டில் பூஜை அறையில் தண்ணீரில் சிறிதளவு துளசியை போட்டு, பூஜை செய்யுங்கள். வீட்டை விட்டு கிளம்பும் போது அந்தத் தீர்த்தத்தை வாயில் போட்டுச் செல்லவும். இதனால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். மேலும், ஒரு துண்டு இஞ்சியை நெய்யில் நனைத்துச் சாப்பிடுவதன் மூலமும், அதிர்ஷ்டம் தேடி வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com