ஜூன் 25-ல் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலின் புதிய கொடிமரம் ஜூன் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
ஜூன் 25-ல் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலின் புதிய கொடிமரம் ஜூன் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

சபரிமலை கோயிலில் உள்ள கொடிமரம் 40 ஆண்டு பழமையானது என்றும் அது பழுதடைந்துள்ளதாக தேவபிரச்சன்னத்தில் தெரியவந்தது. அதன்படி தெய்வ அனுமதி பெற்று புதிய கொடிமரம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சபரிமலை கோயிலுக்கு புதிய கொடிமரம் அமைக்கும் பணிக்காக கேரளாவில் உள்ள பத்தனம் திட்டாவில் கோணி என்ற பகுதியில் கல்லேறி காட்டில் தேக்கு மரம் கண்டறியப்பட்டு பூஜைகள் நிறைவு செய்து ஊர்வலமாக பம்மை கொண்டு வரப்பட்டது.

வேழபரம்பு மணசித்திரபானு நம்பூதிரி மரத்தை புதிய கொடிமரத்துக்கான வடிவமைப்பு ஆலோசனையை வழங்க சேரய்யி சுகுமாரன் ஆச்சாரி, பத்தியூர் பாபு அவர்களின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வல்லநர்களால் பம்பையில் கொண்டு வரப்பட்ட மரத்தை செப்பனிட்டனர். பின்னர் 35 வகையான பச்சிலைகளால் தயாரிக்கப்பட்ட மருத்துவ எண்ணெய் மூலம் பெரிய படகு போன்ற தொட்டியில் 6 மாதம் கொடிமரம் ஊறவைக்கப்பட்டதால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மரம் பலமாக இருக்கும். ஊறவைக்கப்பட்டிருந்த மரத்தை மே 26-ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் வெளியே எடுக்கப்பட்டது.

21 நாட்கள் கடும் விரதம் மேற்கொண்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களால் 18 இடங்களில் ஒவ்வொரு குழுவாக நின்று மரத்தை கீழே வைக்காமல் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பம்பையில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. அங்கு சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜிவரூ தலைமையில் பூஜைகளுடன் கொடிமரம் நிறுத்தப்பட வேண்டிய இடத்தில் மரம் நிலை நிறுத்தப்பட்டது. பருமல அனந்தன் ஆச்சாரி கொடி மரத்திற்கு பீடம், பல அடுக்கு பறைகள், பீடத்தை தாங்கும் அஷ்டதிக் பாலகர் (எட்டு திசை) ஐயப்பனின் குதிரை வாகனத்தை செப்புத்தகடுகளால் பதிந்து வழங்கினார்.

அதைத் தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆச்சாரியின் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்களால் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்ட சுமார் 10 கிலோ தங்கத்தால் தங்க தகடுகள் பதிக்கும் பணி நடைபெற்று பணி நிறைவடைந்தது. கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி முன்னதாக 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.

கொடிமரம் பிரதிஷ்டை சபரிமலை தந்திரி கண்டரரூ ராஜிவரூ தலைமையில் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.50 மணியிலிருந்து 1.40 மணிக்குள் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. புதிய கொடிமரத்தில் 28-ம் தேதி கோயில் உற்சவ கொடியேற்றி 10 நாட்கள் விழா தொடங்குகிறது. 29-ம் தேதியில் இருந்து ஜூலை 6 வரை  உற்சவ பலியும், ஜூலை 6-ம் தேதி பள்ளி வேட்டை, 7-ம் தேதி காலையில் 11 மணிக்கு பம்பையில் சபரிமலை ஐயப்பன் உற்சவருக்கு ஆராட்டும் நடைபெறுகிறது. அன்றைய இரவில் கொடி இறக்கப்பட்டு உற்சவம் நிறைவு பெற்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com