ஸ்ரீரங்கம் கோயிலில் ஜூலை 7-ல் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி வருகிற ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ஜூலை 7-ல் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி வருகிற ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோயில் இணை ஆணையர் ஜெயராமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்டாபிஷேகம் (ஆனி திருமஞ்சனம்) மற்றும் திருப்பாவாடை நிகழ்ச்சி நடத்தப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகம் வருகிற ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.

அன்றைய தினம் உற்சவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கில்களை களைந்து திருமஞ்சனம் செய்து, பச்சை கற்பூரம் சாற்றப்பட்டு மீண்டும் அங்கில்கள் சாற்றப்படும். மேலும், மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்படும்.

8-ம் தேதி திருப்பாவாடை நிகழ்ச்சியை முன்னிட்டு சந்தனு மண்டபத்தில் அதிக அளவு சாதம் தயாரித்து சந்நதி முன் நிரப்பப்பட்டு நம்பெருமாளுக்கு அமுது செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும்.

14-ம் தேதி ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. 15-ம் தேதி தளிகை எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 21-ம் தேதி சக்கரத்தாழ்வார் மற்றும் காட்டழகிய சிங்கர் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com