தொடர் விடுமுறையால் திருப்பதியில் நிரம்பி வழிந்த பக்தர்கள்: விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் கடந்த நான்கு நாட்களாகப் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், முக்கிய பிரமுகர்களின் தரிசனம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையால் திருப்பதியில் நிரம்பி வழிந்த பக்தர்கள்: விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் கடந்த நான்கு நாட்களாகப் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், முக்கிய பிரமுகர்களின் தரிசனம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் சுமார் 12 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதன்படி சனி, ஞாயிறு,  திங்கள் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும்  ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி பக்தர்கள் ஆழ்வார் ஏரியைச் சுற்றி நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் 12 மணி நேரத்திற்குப் பின் சுவாமி தரிசனம் செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், வைகுண்டத்தில் உள்ள 22 அறைகளும் நிரம்பி நாராயணகிரி தோட்டத்தில் காத்திருந்து 10 மணி நேரத்திற்குப் பின் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதேபோல் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக வரிசையில் நின்று பின்னரே சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள் என விஐபி.,க்களின் சிபாரிசு கடிதம் கொண்டு வந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் போதிய அறைகள் கிடைக்காமல், திருப்பதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி, சுவாமியைப் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com