பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலுக்கு யுனெஸ்கோவின் மிகப்பெரிய விருதான ஆசியா பசிபிக் ஹரிடேஜ் விருது வழங்கப்படவுள்ளது. 

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலுக்கு யுனெஸ்கோவின் மிகப்பெரிய விருதான ஆசியா பசிபிக் ஹரிடேஜ் விருது வழங்கப்படவுள்ளது. 

தமிழகத்தில் முதல்முதலாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், கடந்த 2015-ம் ஆண்டு ரூ.25 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு இரண்டு கட்டங்களாக மகா சம்ரோக்ஷணம் நடைபெற்றது. 

கோயிலின் கட்டமைப்புகள் தற்போது பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதாலும், பாரம்பரிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருவதாலும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கோயில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளை மையமாகக் கொண்டுள்ளது. கோவிலைச் சுற்றி 7 பிராகாரங்களும், 21 கோபுரங்களும், 236 உயர ராஜ கோபுரங்களும் உள்ளன. 

கலாசார மரபுகளைப் பாதுகாக்க பாரம்பரிய கட்டடங்களை மீட்டெடுக்க மற்றும் பராமரித்து வருபவர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் யுனெஸ்கோ போட்டிகளை நடத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்டமாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டு நடத்தப்பட்ட பாரம்பரிய விருது போட்டிக்கு ஆஸ்திரேலியா, சீனா உள்பட 6 நாடுகளிலிருந்து 43 பாரம்பரிய கட்டடங்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து ஸ்ரீரங்கம் கோயில், மும்பையின் ராயல் பாம்பே ஓபுரா ஹவுஸ் மற்றும் கிறிஸ்ட் சர்ச் ஆகிய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. 

இதையடுத்து, ஸ்ரீரங்கம் கோயில் ஊழியர்கள் ரெங்கா ரெங்கா கோபுரம் வாயிலில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com