கே.சி.எஸ் ஐயர் கணித்த இந்த வார ராசி பலன்கள் (மேஷம் முதல் மீனம்)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (நவம்பர் 17 முதல் நவம்பர் 23 வரை) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார். 
கே.சி.எஸ் ஐயர் கணித்த இந்த வார ராசி பலன்கள் (மேஷம் முதல் மீனம்)

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (நவம்பர் 17 முதல் நவம்பர் 23 வரை) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார். 

•••

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தோருக்கு உதவிகள் செய்து அவர்களின் அன்பைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கு முன்பணம் கொடுக்கலாம். உங்கள் ஆன்மிக பலம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் ஓரளவுக்குத்தான் ஆதரவு கொடுப்பார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நலமாக முடியும். கூட்டாளிகளின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். மகசூலை இருமடங்காக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவும். 

அரசியல்வாதிகள் உள்கட்சிப் பூசலால் கவலை அடைவீர்கள். உங்களுக்கு எதிராக வேலை செய்பவர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். உங்களின் செயல்கள் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். மாணவமணிகள் விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: சனிபகவானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 18,22.

சந்திராஷ்டமம்: 19,20.

•••

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

உங்களின் பெயரும் புகழும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். உற்றார் உறவினர்கள் நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும் அலைச்சல் குறையும். கடன் வசூல் சற்று தாமதமானாலும் அவசியமான செலவுகளுக்குப் பணம் வந்து கொண்டிருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் உங்களிடம் சகஜமாகப் பழகுவார்கள். வியாபாரிகள் வீண் ஆசைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்ட வேலைகளை ஒதுக்கி வைக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் 

முன்னேற்றமடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சேவையில் அனுகூலம் உண்டாகும். கட்சி மேலிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். 

பெண்மணிகள் பொருளாதார அபிவிருத்தியினால் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளின் சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மன உற்சாகத்தைப் பெறுவார்கள். 

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 17,18.

சந்திராஷ்டமம்: 21,22,23. 

•••
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவையான பொருள் கிடைத்துவிடும். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி செயல்களில் வெற்றி பெறுவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உற்றார் உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். வரவேண்டிய பணமும் வந்து சேரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். கூட்டாளிகள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களால் நன்கு பயனடைவீர்கள். கால்நடைகளின் மூலம் வியாபாரத்தைப் பெருக்க இது சாதமான வாரம். 

அரசியல்வாதிகளைத் தேடி புதிய பதவிகள் வந்து சேரும். தொண்டர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்கு முடித்துக்கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பிறரிடம் பேசும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

மாணவமணிகளுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். 

பரிகாரம்: பைரவரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 18,20. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

•••

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். எதிரிகளின் பலம் குறையும். அரசு வழியில் சலுகைகளைப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களின் ஆற்றல் அதிகரிக்கும். தைரியத்துடன் எதையும் சாதிப்பீர்கள். வியாபாரிகளுக்கு அலைச்சலும் பதற்றமும் நீங்கும். வருமானம் பெருகும். கூட்டுத்தொழில் நன்றாக இருக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். மகசூல் அதிகரிக்கும். கால்நடைகளாலும் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு 
புகழும் அங்கீகாரமும் கிடைக்கும். சக கலைஞர்களும் உங்களுக்கு உதவுவார்கள். 

பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வீண்வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். சேமிப்பில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,19.

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொறுமையுடன் உங்கள் காரியங்களைச் செய்வீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் மறையும். வீட்டிலும் வெளியிலும் சுமுகமான நிலைமை உருவாகும். திருமண முயற்சிகள் நிறைவேறும். எதிர்பார்த்த கடன் கிடைத்து தொழிலை மேம்படுத்துவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். மூத்த அதிகாரிகளும் சக ஊழியர்களும் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும். கையிருப்புப் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். கட்சி மேலிடம் பாராட்டும். கலைத்துறையினர் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள். சக கலைஞர்களும் உதவுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். கணவரிடம் அன்பு அதிகரிக்கும். மாணவமணிகள் பொறுப்புடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். உள்ளரங்கு விளையாட்டு
களில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19,20. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

•••

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பணம் பல வகைகளில் உங்கள் இல்லம் நாடி வரும். சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இது உகந்த நேரம். பெற்றோர் வழியில் தொடர்ந்த மருத்துவச் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உற்றார் உறவினர்கள் நண்பர்களிடம் இருந்த பகை மாறும். 

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளை விட்டுப்பிரிய நேரிடலாம். புதிய கடன்கள் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக அமையும். சிறிய முதலீட்டில் புதிய நிலங்களை வாங்கலாம். எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். தொண்டர்களின் நலனில் அக்கறை செலுத்தவும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள். ஆனாலும் சில சிரமங்களுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். 

மாணவமணிகள் வருங்காலத்திற்காகச் செய்யும் பயிற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20,21. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பணப் பிரச்னை தீரும். எனவே, சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். எதிரிகள் அடங்கிப் போவார்கள். உடல்நலம் சீராக இருக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். பயணங்களால் நன்மைகளைப் பெறுவீர்கள். திறந்த மனதுடன் பழகி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சுமுகமான நிலைமை தென்படும். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய கடைகளைத் திறப்பதற்கான முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம். விவசாயிகளின் உடலுழைப்பிற்கு இரு மடங்கு லாபம் கிடைக்கும். பொருளாதார நிலைமை சீரடையும். 

அரசியல்வாதிகள் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் கை தேடிவரும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் நன்மதிப்பு உயரும். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,21. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

•••

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானம் எதிர்பார்த்தபடியே அமையும். உற்றார் உறவினர்களின் அலட்சியப் போக்கைப் பெரிது படுத்த மாட்டீர்கள். உடன்பிறந்தோர் வகையில் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். சமுதாயத்தில் உங்கள் பெயரும் புகழும் உயரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் சில சிக்கல்களைச் சந்திப்பார்கள். கூட்டாளிகளிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். சுப காரியங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சிலருக்கு புதிய பதவிகள் தேடிவரும். கலைத்துறையினர் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். திறமைகளை வளர்த்துக்கொள்ளவும். பெண்மணிகள் பெரியோர்களின் ஆசியுடன் திட்டமிட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து காலநேரத்தை மகிழ்ச்சியுடன் கழிப்பீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 21,22. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

•••

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கவலைகள் மறைந்து இன்பம் பெருகும். செய்தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் நூதன முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பார்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளுவீர்கள். கூட்டாளிகளை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகள் புதிய குத்தகைகள் கிடைத்து பொருளாதார முன்னேற்றமடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பாராத பலனைப் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யவும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். சக கலைஞர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடலாம். பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும்.

மாணவமணிகள் படிப்பில் சிரத்தையுடன் இருக்கவும். விளையாடும் போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 21,22. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

•••

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தடைகள் விலகும். யோக பாக்கியங்கள் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் அகலும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் சீராகப் பணியாற்றத் தொடங்குவார்கள். பயணங்களால் பணவரவு உண்டாகும். வியாபாரிகளுக்கு முயற்சியின் அளவுக்கு ஏற்ப லாபம் அதிகரிக்கும். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பீர்கள். விவசாயிகள் சந்தையில் போட்டிக்கு ஏற்றவாறு பொருள்களை விற்பனை செய்வீர்கள். திருப்திகரமாக லாபத்தை அள்ளுவீர்கள். 

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சற்று குறைபாடுகள் உண்டாகும். கட்சி மேலிடத்தில் கவனமாக இருக்கவும். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். உங்களின் செயல்கள் மக்களைக் கவரும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். 

மாணவமணிகளுக்கு உடற்பயிற்சியில் நாட்டம் அதிகரிக்கும். கேளிக்கைகளிலும் விளையாட்டிலும் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20,22. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

•••

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் நன்றாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் மதிப்பு மரியாதை உயரும். இருப்பினும் உடல் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டி வரும். குடும்பத்தினர் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். ஆன்மிக பலம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் குறித்த காலத்தில் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமாராகவே இருக்கும். புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடவும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த நன்மை அடைவீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். பதவிகள் தேடி வரும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்கள் செய்வார்கள். பணவரவுக்குக் குறைவு வராது. பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தவும். 
மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டில் வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவை.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 18,22. 

சந்திராஷ்டமம்: இல்லை.

•••

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் அனைத்தும் திடீரென்று நடந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். தந்தையை அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருக்கவும். உடல்நலத்தில் அக்கறை காட்டவும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். சக ஊழியர்களை நம்பி எந்தக் காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சுமாராகவே இருக்கும். 

அதனால் வியாபாரத்தை ஸ்திரப்படுத்த முயல்வீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் சற்று மந்தமாகவே இருக்கும். கால்நடைகளுக்கான பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். 
அரசியல்வாதிகளைத் தேடி புதிய பதவிகள் வந்து சேரும். எதிர்க்கட்சியினரும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். 
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோரின் ஆதரவு பெறுவார்கள். 

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 19,20. 

சந்திராஷ்டமம்: 17,18.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com