நவ.19-ல் சுந்தர சுவாமிகளின் ஜெயந்தி விழா


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமழம் என்னும் பேரூரில் சித்தி அடைந்த கோடகநல்லூர் தவத்திரு சுந்தர சுவாமிகள் ஆவர்.

இவருடைய தலைமையில் அரிமழம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. அவருடைய வாழ்நாளில் 22 ஆலயங்களுக்கு குடமுழுக்கு நடத்தினார்.

புனித யாத்திரையாக வடநாடு சென்று திரும்பிய சுவாமிகள், நர்மதா பாணலிங்கம் இருக்குமிடம் மங்களகரமாய் இருக்கும் என்று சொல்லி தமது அடியார்களிடம் கொடுத்தார். 1878-ம் ஆண்டு, அக்டோபர் 21-ம் தேதி அரிமழத்தில் சித்தி அடைந்தார்கள்.

அவரது சீடர்கள் சுவாமியின் சமாதி மீது கோயிலைக்கட்டி, அதில் அவர் தந்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தினார்கள். இம்மாதம் சுவாமிகளின் ஜெயந்தி விழா நடைபெறுகின்றது. 

தொடர்புக்கு : பொ.ஜெயச்சந்திரன்

நாள்: 19.11.2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com