அழகான மனைவி அமையும் யோகம் யாருக்கு? 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சான்றோர்கள் வாக்கு.
அழகான மனைவி அமையும் யோகம் யாருக்கு? 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சான்றோர்கள் வாக்கு. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்கத் தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி அமைவார்கள். 

ஒருவருக்கு ஜாதகத்தில் கட்டம் சரியாக இருந்தால், நீங்கள் கட்டம் கட்டாமலேயே அழகான பெண் உங்களுக்கு அமையுமாம். அதாவது, ஏழாம் இடத்தில் சுபர் இருத்தல், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் அமர்தல், பாவக்கிரகங்கள் பார்க்காமல் இருத்தல் போன்றவை அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளதாம். 

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள். இந்த உலகில் இவர்களுக்கு வாய்க்கும் அனைத்தையும் அனுபவித்து, ரசித்து வாழ்வார்கள். உணவாக இருந்தாலும் நல்ல ருசியாக இருக்க வேண்டும், சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் உஷாராக இருப்பார்கள் இந்த விஷயத்தில். அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/கணவன் கிடைப்பது நிச்சயம்.

தனுசு, துலாம், கடகம் ராசிக்காரர்கள் ஆண்/பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். ரசனையான ஆட்கள், புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள் இவர்கள்.

மகரம், கும்பம், சிம்மம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசிக்காரர்கள் எல்லாம் இஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறுவதை விட மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறலாம் இதை ஜோதிடமே சொல்கிறது. நல்ல நேரம் வந்தால் திருமணம் நடக்கும். இவர்கள் ஒருபக்கம் வேலையைப் பார்க்க, சுபர் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கன்னி, மீனம், மிதுனம் ராசிகாரர்கள் எதுவாக இருந்தாலும் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் இவர்களுக்கான துணையை தேர்வு செய்வதிலும் கூட இவ்வாறு தான் இறங்குவார்கள். ஒருவரது குணாதிசயங்கள், அவரது குடும்பம், என அனைத்தும் தெரிந்துகொண்டு தான் திருமணம் செய்துகொள்ள இறங்குவார்கள். இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.

குறிப்பு
இவை யாவும் பொதுவான குறிப்புகள் தான். ஜாதகத்தில் நான்காம் இடம் வலுத்தவர், 7-ம் இடத்தை சுபர் பார்வை செய்பவர், சுக்கிரன், குரு வலிமையான நிலையில் உள்ளவர்களுக்கு அழகான கணவன் / மனைவி அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com