திரௌபதிக்கு கண்ணன் புடவை அளித்த தத்ரூப அலங்காரம்

கோடப்பாக்கம் ஆண்டவர் நகர் அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பலங்காரம் ஒன்றைச் செய்துள்ளனர். 
திரௌபதிக்கு கண்ணன் புடவை அளித்த தத்ரூப அலங்காரம்

கோடப்பாக்கம் ஆண்டவர் நகர் அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பலங்காரம் ஒன்றைச் செய்துள்ளனர். 

நம் இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தில் முக்கிய திருப்புமுனையான திரௌபதியின் துகிலுரியும் நிகழ்வு. இதுவே போருக்கு அதி பலமான காரணமானது. 

சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் அனைத்தையும் இழக்கின்றான் தருமன். துரியோதனன் கெளரவர்களில் மூத்தவன். அவன் தம்பி துச்சாதனிடம் பாண்டவர்களின் மனைவியான திரௌபதியை இழுத்து வா என்கின்றான். அவனும் சென்று தன் அண்ணியான திரௌபதியை சபைக்கு இழுத்து வருகின்றான். 

அவள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லியும் விடாமல், அவளை இழுத்து வந்தான். சபையில் அவளின் ஆடையை களைந்து நிர்வாணமாக்கும்படி துரியோதனன் கூற அதன்படி துச்சாதனன் புடவையை பிடித்து இழுக்க திரௌபதி கண்ணனை பிரார்த்திக்க----துச்சாதனன் ஆடையை இழுக்க இழுக்க ஆடை வளர்ந்துகொண்டே செல்லும்படி கண்ணன் அருள்பாலிக்கின்றான். 

அந்தக் காட்சியை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டவர் நகரில் அருள்பாலிக்கும் தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு சிறப்பலங்காரம் ஒன்று செய்யப்பட்டது.

இந்த அலங்காரம் சுமார் 508 புடவைகளை வைத்து தத்ரூபமாக செய்துள்ளனர். அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த அலங்காரத்தை பொதுமக்கள் அனைவரும் காணலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com