பீகாரில் துடைப்பத்தைக் கொளுத்தி போடும் வினோத தீபாவளி!

எந்திரமயமாகிவிட்ட இந்த உலகத்தில் நம் வாழ்க்கையும் எந்திரம் போலவே போனதுதான் துரதிர்ஷ்டம்.
பீகாரில் துடைப்பத்தைக் கொளுத்தி போடும் வினோத தீபாவளி!

எந்திரமயமாகிவிட்ட இந்த உலகத்தில் நம் வாழ்க்கையும் எந்திரம் போலவே போனதுதான் துரதிர்ஷ்டம். வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டாலும் வெறுப்பு வரக்கூடாது என்றுதான் திருவிழாக்களும், பண்டிகைகளும் உண்டானது. நம் அன்றாட பணிகள், சலிப்பு, அலுப்பிலிருந்து விடுபட்டு குடும்பம், சுற்றம், சொந்தம் சூழப் பண்டிகைகள் கொண்டாடி அனைவரும் மகிழ்ந்திருப்பதில் தீபாவளிக்கு 
முதலிடம்.

தீபாவளி பண்டிகை இந்தியாவில் மட்டுமில்லாமல் கேரளா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். 

அப்படிப்பட்ட தீபாவளியை பீகாரில் வினோத முறையில் துடைப்பத்தைக் கொளுத்தி கொண்டாடுகின்றனராம்....அது என்வென்று பார்ப்போம்..

பீகாரில் தீபாவளியின்போது பழைய பொருள்களைக் கழித்து வீட்டை சுத்தம் செய்வார்கள். பிறகு ஒரு துடைப்பத்தைக் கொளுத்தி வீட்டிற்கு வெளியே போடுவார்கள். இவ்வாறு செய்வதால் மூதேவி வெளியேறி வீட்டிற்குள் ஸ்ரீதேவியான லட்சுமி வருவாள் என்பது நம்பிக்கை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com