யார் யாரெல்லாம் கந்த சஷ்டி விரதம் இருக்கலாம்? 

முருகனை வேண்டி நம்மை நாமே வருத்திக்கொண்டு இருக்கும் விரதம் தான் கந்தசஷ்டி விரதம்.
யார் யாரெல்லாம் கந்த சஷ்டி விரதம் இருக்கலாம்? 

முருகனை வேண்டி நம்மை நாமே வருத்திக்கொண்டு இருக்கும் விரதம் தான் கந்தசஷ்டி விரதம். இந்த விரதத்தைப் பொறுத்தவரை குழந்தை இல்லாதவர்களும் கலந்து கொள்ளலாம் என்று தான் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

அனைவரும் கலந்துகொள்ளும் விரதம் தான் கந்தசஷ்டி. உதாரணமாக சொத்து வாங்கி இருப்போம். அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கலாம். இல்லையெனில் சொத்து வாங்க பணம் கொடுத்திருப்போம், ஆனால் பத்திரப் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். வீடு கட்ட அஸ்திவாரம் போட்டிருப்போம்..ஆனால் கட்ட முடியாத சூழ்நிலை உண்டாகுதல். 

வேலையில் கடுமையான உழைப்பு இருந்தும், அதற்கான அங்கீகாரம் இல்லாது இருத்தல், பதவி உயர்வு தள்ளி போகுதல், தொழிலில் மேன்மை இல்லாதிருத்தல், வாழ்க்கையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் சூனியமாக இருத்தல் இவர்கள் அனைவருமே இந்த விரதத்தை மேற்கொண்டு மேன்மை அடையலாம். குலதெய்வத்திற்குச் சென்று வழிபட முடியாமல் இருந்தாலும் இந்த விரதத்தின் மூலம் அதைச் சரிசெய்யலாம். 

இந்த விரதத்தின் முக்கியத்துவம் அய்யன் முருகனை எந்த நேரமும் நினைத்து இருக்க வேண்டுமே தவிர, பட்டினி இருந்து தான் முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் உடல் வலிமைக்கு ஏற்றவாறு உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம். 

முருகன் கோயிலுக்கு சென்று தான் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இல்லை. நாம் இருக்கும் இடத்திலேயே விரதத்தை தொடரலாம். நம் மனமது செம்மையாக வேண்டும், இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைய வேண்டும் என்பதே முக்கியமாகும். கஷ்டிசஷ்டி கவசம் தினமும் பாராயணம் செய்யலாம். சுபநிகழ்ச்சிகள் தடை ஏற்படுவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com