குருப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

2017-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி செம்டம்பர் 02-ம் தேதி நிகழ்ந்தது. குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு சஞ்சாரம் செய்துள்ளார்.
குருப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம்?

2017-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி செம்டம்பர் 02-ம் தேதி நிகழ்ந்தது. குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு சஞ்சாரம் செய்துள்ளார். சரி, எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்தால் குருபகவானின் பரிபூரண அருளை பெறலாம் என்பதைப் பார்ப்போம்.

மேஷ ராசி
வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறந்தது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவது சிறந்தது.

ரிஷப ராசி
தேய்பிறை சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வழிபடலாம். வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்தியை வழிபடுவது சிறந்தது.

மிதுன ராசி
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது. சங்கரநாராயணரை வழிப்படுவது நன்மையைத் தரும்.

கடக ராசி
வியாழக்கிழமைதோறும் குரு பகவானை அர்ச்சனை செய்து வழிப்படுங்கள். திங்கட்கிழமை அன்று சிவனை வழிபட்டால் நன்மையைத் தரும்.

சிம்ம ராசி 
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது. நந்தீஸ்வரருக்கு பிரதோஷ நாட்களில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.

கன்னி ராசி
வெள்ளிக்கிழமைகளில் காளிக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறந்தது. வியாழக்கிழமைகளில் கொண்டைக் கடலை கட்டிய மாலையை தட்சணாமூர்த்திக்கு அணிவித்து வழிபடுவது சிறப்பு.

துலாம் ராசி
சிவாலயத்தில் சென்று முருகப் பெருமானை தரிசிப்பது சிறந்தது. காளிக்கு வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறந்தது.

விருச்சக ராசி
பௌர்ணமி நாட்களில் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்வது சிறப்பு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்வது சிறப்பு.

தனுசு ராசி 
விநாயகருக்கு சதுர்த்தி திதியன்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது சிறந்தது. திங்கட்கிழமை அன்று சிவபெருமானுக்கு நெய் தீபம் வழிபாடு செய்வது சிறந்தது.

மகர ராசி
கார்த்திகையன்று முருகனுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மை தரும். வியாழக்கிழமைகளில் நவக்கிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறந்தது.

கும்ப ராசி
விநாயகருக்கு சதுர்த்தி அன்று அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பு. ஏகாதசி அன்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது சிறப்பு.

மீன ராசி
பைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டு அருளை பெறுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com