ஸ்ரீமாமேரு தியான நிலையத்தில் நவராத்திரி விழா

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீமாமேரு தியான நிலையத்தில் நவராத்திரி விழா 21.09.17 முதல் 03.09.17 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
ஸ்ரீமாமேரு தியான நிலையத்தில் நவராத்திரி விழா

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீமாமேரு தியான நிலையத்தில் நவராத்திரி விழா 21.09.17 முதல் 03.09.17 வரை சிறப்பாக நடைபெற உள்ளது. செப்டம்பர் 22, வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை ஏகதின லலிதா ஸஹஸ்ரநாம 1 கோடி அர்ச்சனை விழா சிறப்பாக நடைபெற இருக்கிறது. 

நடைபெறும் நவராத்திரி விழா நிகழ்ச்சிகள்: 

21.09.17 வியாழன் காலை 10.00 மணிக்கு சாந்தி துர்கா ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு துர்கா அலங்காரம் செய்யப்படுகிறது.

22.09.17 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு வன துர்கா ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு சாகாம்பரி அலங்காரம் செய்யப்படுகிறது.

23.09.17 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஜெயதுர்கா ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்படுகிறது.

24.09.17 ஞாயிறு காலை 10.00 மணிக்கு சந்தானலக்ஷமி ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு காமாட்சி அலங்காரம் செய்யப்படுகிறது.

25.09.17 திங்கள் காலை 10.00 மணிக்கு சௌபாக்யலக்ஷமி ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு மகாலட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது.

26.09.17 செவ்வாய் காலை 10.00 மணிக்கு ஐஸ்வர்யலக்ஷமி ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு அன்னபூர்ணா அலங்காரம் செய்யப்படுகிறது.

27.09.17 புதன் காலை 10.00 மணிக்கு வாக்தேவி, நித்யாதேவி ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு பார்வதி அலங்காரம் செய்யப்படுகிறது.

28.09.17 வியாழன் காலை 10.00 மணிக்கு நவதுர்கா ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு கஜலட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது.

29.09.17 வெள்ளி காலை 10.00 மணிக்கு மேதாசூக்த ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு சரஸ்வதி அலங்காரம் செய்யப்படுகிறது.

30.09.17 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சண்டி ஹோமம் செய்து, அன்று மாலை 4.00 மணிக்கு மகிஷாசுரமர்த்தனி அலங்காரம் செய்யப்படுகிறது.

நவராத்திரி விழாவில் ஒரு நாள் விழாவை நடத்த விரும்பும் அன்பர்கள் ரூ.11.000/- செலுத்தினால், அவர்கள் கட்டளையாக நடத்தப்படும். சண்டி ஹோமத்தில் கலந்துகொள்ள விரும்புவோர், தமது பெயர், 

நட்சத்திரம், ராசி ஆகியவற்றை குறிப்பிட்டு ரூ.200/-ஐ நேரிலோ (அ) M.O மூலமாகவோ ஸ்ரீ மாமேரு டிரஸ்டுக்கு அனுப்பினால் சங்கல்ப பூஜையில் பெயர் சேர்த்துக் கொள்ளப்பட்டு, பூஜை நடந்த பின்னர் பிரசாதம் வழங்கப்படும். 

அன்பர்கள் திரளாகக் கலந்துகொண்டு 10 நாட்கள் நடக்கும் அன்னதானத்திற்கும், விழாவிற்கும், பொருளாகவோ, பணமாகவோ தந்து அம்பாளின் அனுக்ரஹத்தைப் பெறலாம். 

மேலும் தொடர்புக்கு - 28131254 / 28132183

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com