பித்ரு தோஷ நிவர்த்தி செய்யும் போது கவனிக்க வேண்டியவை...

பித்ரு தோஷ நிவர்த்தி செய்யும் போது எந்தெந்த காரியங்களை செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பித்ரு தோஷ நிவர்த்தி செய்யும் போது கவனிக்க வேண்டியவை...

பித்ரு தோஷ நிவர்த்தி செய்யும் போது எந்தெந்த காரியங்களை செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

செய்ய வேண்டியவை
• அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்து பூஜைகளைச் செய்ய வேண்டும்.

• பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை  வீட்டில் வேறு தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்யக் கூடாது. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.

• மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காகவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய  வேண்டும்.

• மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

• பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப் பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

• மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறது சாஸ்திரம். ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

செய்யக் கூடாதவை
• பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில், தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்குச் செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

• தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

• அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

• சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.

• சிரார்த்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com