நவராத்திரி கொலு வைக்க உகந்த நேரம் எது?

நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடப்படும் இந்த விழாவானது,
நவராத்திரி கொலு வைக்க உகந்த நேரம் எது?

நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடப்படும் இந்த விழாவானது, மீண்டும் மீண்டும் புதிது புதிதாக ஆண்டுதோறும் பல்வேறு மாற்றங்களுடன் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 20-ம் தேதி துவங்குகிறது. 

நவராத்திரி விழா பல்வேறு கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் வீடுகளிலும், தனியார் நிறுவனங்களிலும் கொலு வைத்து வழிபாடு நடத்துகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு நவராத்திரி விரதத்தை எந்த நேரத்தில் தொடங்கலாம் என்று பார்ப்போம். 

2017-ம் ஆண்டு நவராத்திரி விரதம் தொடங்க நல்ல நேரம்

நவராத்திரி ஆரம்பம் -  20.09.2017 (புதன் கிழமை) காலை 11.24 மணி - அமாவாசை திதி

கொலு அமைக்க, கலச ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் - காலை 6.00 முதல் 7.30 மணிக்குள், 9.15 முதல் 10.15 வரை. அமாவாசை திதி இருக்கும் போதே கலசம் வைப்பது சிறப்பு.

கொலு ஸ்தாபனம் செய்யப்படும் பூஜையறையில் மாக்கோலம் இட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பிறகு கொலு படியில் கலசம் வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com