சர்ப்பதோஷம் எதனால் ஏற்படுகிறது?

நாகப்பாம்பை தெய்வ சொரூபமாக நினைத்து வணங்கி வருகின்ற நாடு நம் இந்திய நாடு. இது இன்றைக்கு நேற்றல்ல விக்கிரக வழிபாட்டிற்கு முன்பே தோன்றிய வழிபாடு ஆகும். 
சர்ப்பதோஷம் எதனால் ஏற்படுகிறது?

பலருக்கும் இந்த சர்ப்ப தோஷம் குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்ற வார்த்தையை தற்காலத்தில்  அடிக்கடி கேட்க முடிகிறது. நெடுநாட்களாகத் திருமணம் தடைபட்டு வருகிறதா, திருமணம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா, சர்ப்பதோஷம் ஆக இருக்கும், போய் பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும், என்று ஜோதிடர்கள் சொல்லி வந்த காலம்போய்,  தற்காலத்தில் சாதாரண மக்களே இந்த பரிகாரம் குறித்து பேசும் அளவிற்கு சர்ப்ப தோஷம் என்ற சொல் மிகவும் பிரபலமாகிவிட்டது. 

சரி, இந்த சர்ப்பதோஷம் எதனால் ஏற்படுகிறது? என்பதைப் பற்றி பார்ப்போம். 

நாகப்பாம்பை தெய்வ சொரூபமாக நினைத்து வணங்கி வருகின்ற நாடு நம் இந்திய நாடு. இது இன்றைக்கு நேற்றல்ல விக்கிரக வழிபாட்டிற்கு முன்பே தோன்றிய வழிபாடு ஆகும். 

ஆதிசேஷன் என்ற நாகசர்ப்பத்தின் மடியில்தான் விஷ்ணு பள்ளிகொண்டிருக்கிறார். சிவபெருமானின் கழுத்தில், உடம்பில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருப்பவரும் சர்ப்பம் தான். சுப்பிரமண்ய ஸ்வாமியின் காலடியில் இருப்பவரும் சர்ப்பம் தான். நினைத்த மாத்திரத்தில் நேரிடையாக வந்து, துன்பத்திலிருந்து காப்பாற்றுபவள் அம்மன்தான். அதுவும் எந்த ரூபத்தில் என்றால் நாகப் பாம்பின் வடிவில் என்பதை எல்லோரும் அறிவார்கள். 

அப்படிப்பட்ட நாகப்பாம்பை தெரிந்தோ தெரியாமலோ முற்பிறவியில் வீணாக அடித்துக் கொன்றிருக்கலாம் அல்லது துன்புறுத்தியிருக்கலாம். இறைவனின் அம்சமான நாகசர்ப்பத்தை நாம் முன் ஜென்மத்தில் துன்புறுத்திய காரணத்தால் இந்த ஜன்மத்தில் நாம், அதனுடைய சாபத்தினால் பலவகையான துன்பத்திற்கு ஆளாகலாம்.

அதுவே குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயில் வீழ்ந்தும் அல்லது அவர்களாலே விரட்டப்பட்டு பிற்காலத்தில் வருந்துவதும் காரணம் என்று ஜோதிட சித்தாந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அனுபவமும் இது உண்மை என்று சொல்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com