கனவில் வந்து சுடிதார் அலங்காரம் செய்ய சொன்ன அம்மன்: குருக்கள் கொடுக்கும் விளக்கம்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோயிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  
கனவில் வந்து சுடிதார் அலங்காரம் செய்ய சொன்ன அம்மன்: குருக்கள் கொடுக்கும் விளக்கம்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதர் கோயிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான புகழ்பெற்ற மாயூரநாதர் கோயிலில் தனி சன்னதியில் அபயாம்பிகை அருள்பாலித்து வருகின்றார்.  அம்மனுக்கு நாள்தோறும் 6 கால பூஜை நடைபெற்று வருகின்றது. 

பொதுவாக இந்து கோயில்களில் அம்மனுக்கு பட்டு அணிவித்து பூஜை செய்வது வழக்கம். அந்தவகையில், கோயிலில் பணிபுரியும் குருக்களான ராஜ், கல்யாண் ஆகியோர் தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கத்துக்கு மாறாக, அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்துள்ளனர். சுடிதாரால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது. இதைப் பார்த்த மக்கள் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, கண்டனமும் தெரிவித்தனர். 

இதுகுறித்து, குருக்களிடம் விளக்கம் கேட்டதற்கு...இருவரும் அம்மன் எங்கள் கனவில் வந்த சுடிதார் அலங்காரம் செய்ய சொன்னதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, கோயிலை நிர்வகித்துவரும் திருவாவடுதுறை ஆதினம் இரண்டு குருக்களையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆதின விதிகளை மீறி இருவரும் செயல்பட்டுள்ளதாக ஆதினம் குற்றம் சாற்றியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com