சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேரும் போது உண்டாகும் பலன்கள்

சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து உண்டாக்கும் பார்வையின் பலன்களைப் பற்றி தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் விரிவாக விளக்கியுள்ளார். 
சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேரும் போது உண்டாகும் பலன்கள்

சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து உண்டாக்கும் பார்வையின் பலன்களைப் பற்றி தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் விரிவாக விளக்கியுள்ளார். 

சுக்கிரன் - புதன் பார்வை

சுக்கிரனும் புதனும் எப்போதும் சூரியனுக்கு அருகிலேயே இருப்பவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள தூரம் எப்பவுமே 72 பாகைகளுக்கு மேல் போகாது. அதிகபட்சமாக 72 பாகைகள் வரையில்தான் போகமுடியும். ஆகவே, சுக்கிரன், புதன் சேர்க்கை, முப்பது பாகைப் பார்வை, 45 பாகைப் பார்வை, 60 பாகைப் பார்வை ஆகிய மூன்று பார்வைகள்தான் ஏற்பட முடியும்.

சுக்கிரன், புதன் சேர்க்கை, 30 பாகைப் பார்வை, 60 பாகைப் பார்வை

இது ஒரு நற்பார்வை. கலைகளில் ஆர்வம் மிக்கவர், அழகை ரசிப்பவர்கள், சிலர் ஓவியர்களாக இருப்பவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்கள், வாழ்க்கையில் நடந்த நல்லவற்றையே நினைப்பவார்கள், பல நற்குணங்களைப் பெற்றவர்கள். நல்ல நண்பராக இருப்பவர்கள், நாம் உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்தைக் கொடுத்து இருக்கிறோம். இவர் ஒரு பெண்மணி. கலைகளில் ஆர்வம் உள்ளவர். ஓவியத்தில் திறமை மிக்கவர். அவர் படித்த படிப்பும் VISUAL COMMUNICATION என்ற படிப்புத்தான். ஆக, புதன் - சுக்கிரன் சேர்க்கை அல்லது நற்பார்வை ஒருவருக்கு நன்மை பயக்கக்கூடியதே!

சுக்கிரன், புதன் 45 பாகைப் பார்வை

இது ஒரு அசுபப் பார்வை. கலைகளால் துன்பம், பிரச்னைகள், வாழ்க்கையின் இருண்ட பகுதியையே நினைப்பவர்கள். இந்தப் பார்வை இருப்பவர்கள், கலைத் துறையில் இறங்குவதற்கு ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே செயலில் இறங்குவது நல்லது.

அடுத்து, சூரியனுடன் சுக்கிரன் ஏற்படுத்தும் பார்வையின் பலன்களைப் பார்ப்போம். சுக்கிரனுக்கும், சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் எப்போதுமே 48 பாகைகளுக்கு மேல் போகாது. ஆகவே, சூரிய-சுக்கிரன் சேர்க்கை, 30 பாகைப் பார்வை, 45 பாகைப் பார்வையைத் தவிர வேறு பார்வைக்கு வழி இல்லை. இனி பார்வையின் பலன்களைப் பார்ப்போம்.

சூரியன், சுக்கிரன் சேர்க்கை, 30 பாகைப் பார்வை

சூரியன் - சுக்கிரன் சேர்க்கையை, நமது ஜோதிடத்தில் சுக்கிரன் அஸ்தங்கமாகிவிட்டது என்பார்கள். உண்மையில், அவ்வாறு அஸ்தங்கமாவது இல்லை. மாறாக, சூரியனுடன் சுக்கிரன் சேரும்போது பலம் பொருந்தியவராக நல்லது செய்பவராக மாறிவிடுகிறார். மகிழ்ச்சியுள்ளவராகவும், கலகலப்பாகப் பழகும் குணம் கொண்டவராகவும், பெண்களுடன் நட்பாகப் பழகும் குணமுள்ளவராகவும், ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவராகவும், கலைகளில் விருப்பம் கொண்டவராகவும், பெற்றோரிடமிருந்து அனுகூலங்களைப் பெறுவராகவும் இருப்பர். உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இதில், சூரியன் - சுக்கிரன் சேர்க்கையைப் பாருங்கள். இவர் பல கலைகளில் நாட்டமுள்ளவராகவும், பெற்றோர்களின் ஆதரவைப் பெற்றவராகவும் இருக்கிறார். சூரியன், சுக்கிரன் சேர்க்கை இவருக்குப் பலவிதங்களில் வாழ்க்கையில் உதவி புரிந்து இருக்கிறது.

அடுத்ததாக, சுக்கிரனும், சந்திரனும் உண்டாக்கும் பார்வையின் பலன்களைப் பார்ப்போம்.

சுக்கிரன், சந்திரன் சேர்க்கை, 60 பாகைப் பார்வை, 120 பாகைப் பார்வை

கலைகளில் ஆர்வம் இருக்கும். சினிமா, தொலைக்காட்சி, டிராமா போன்றவற்றில் ஆர்வம் இருக்கும். சிலர் அதில் மிகுந்த திறமைசாலிகலாகக்கூட இருப்பார்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள். திருமண வாழ்க்கை, குடும்பம் மற்றும் பொருளாதாரம் நன்றாக இருக்கும்., தாயாரிடமிருந்து அனுகூலங்கள், மற்றும் பொதுவான நல் விஷயங்கள் இவருக்கு அனுகூலமாகவே இருக்கும்.

சந்திரன், சுக்கிரன் 180 பாகை, 90 பாகைப் பார்வை

பொருள், மற்றும் சொத்துகள் நஷ்டம், குடும்பத்தில் ஏமாற்றம், திருமணம் மற்றும் வியாபாரத்தால் ஏமாற்றம், மதுபானத்தில் ஆசை, பெண்களாக இருந்தால் மாதவிலக்குப் பிரச்சனைகள் ஆகியவை இருக்கும்.

மற்ற பலன்களை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

– ஜோதிடர் சோ.சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com