நான்காம் பாவம் பலமிழந்தால் கல்வி தடைப்படுமா? 

கல்வி சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல் - நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் - பத்திரிகை, ஜோதிடம், எழுத்துதுறை, பேச்சு என்பது போன்ற விஷயங்களுக்கும் காரகன் புதன்.
நான்காம் பாவம் பலமிழந்தால் கல்வி தடைப்படுமா? 

நான்காம் பாவம் பலமிழந்தால் கல்வி தடைப்படுமா? தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்றுப் பார்ப்போம். 

கல்வி சார்ந்த விஷயங்கள் மட்டுமல்லாமல் - நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் - பத்திரிகை, ஜோதிடம், எழுத்துதுறை, பேச்சு என்பது போன்ற விஷயங்களுக்கும் காரகன் புதன்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுகஸ்தானம் என்று சொல்லப்படுவது நான்காம் பாவமாகும். அதிகமான காரகத்துவங்கள் கொண்டது நான்காம் பாவம். கல்விக்கு நான்காம் பாவத்தைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நான்காம் பாவம் பலமில்லாத போது நாம் காரககிரகமான புதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நான்காம் பாவம் பலமிழந்து போனாலோ - நான்காம் பாவாதிபதி பலமிழந்து போனாலோ - புதன் வலுவாக இருந்தால் - ஜாதகர் கல்வியில் சாதனை புரிவார். 

பரிகாரம்
கல்வி சார்ந்த விஷயங்களில் தடையோ தாமதமோ ஏற்பட்டால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வருவது முக்கியம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com