திருமலை பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடக்கம்

திருமலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக வியாழக்கிழமை தொடங்கியது. 
திருமலை பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடக்கம்

திருமலையில் செப்டம்பர் 13-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக வியாழக்கிழமை தொடங்கியது. 

திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை (செப்.13) முதல் 21 ஆம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவம் எவ்வித தடங்கலும் இன்றி, சிறப்புடன் நடைபெற அதன் முந்தைய நாள் திருமலையில் அங்குரார்பணம் எனும் முளைவிடுதல் உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தியது. 

பிரம்மோற்சவத்தையொட்டி வைகாநஸ ஆகமமுறைப்படி வேங்கடேச பெருமாளுக்கு தினமும் பூஜைகளும் அலங்காரங்களும் செய்விக்கப் பட்டு நான்கு மாடவீதிகளில் மலையப்ப சுவாமி வீதி உலா வருகிறார். குறிப்பாக 17-ந் தேதி கருட சேவையும், 18-ந் தேதி மாலையில் தங்க ரத ஊர்வலமும், 20-ந் தேதி காலை தேர்த் திருவிழாவும், 21-ந் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அப்போது 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கருட சேவையின் போது பாதுகாப்பு பணிகளில் கூடுதலாக 1,500 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வரும் 21-ந் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிரம்மோற்சவ விழா வினைக்காண வசதியாக 31 இடங்களில் எல்.இ.டி. தொலைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 11 இடங்களில் முதலுதவி மையங்கள், 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் அலிபிரி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com