கார்த்திகை தீபத் திருவிழா: திருப்பரங்குன்றத்தில் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி. கம்பத்தடி மண்டபத்தில் கார்த்திகை திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடிக்கு சிறப்பு தீபாராதனை செய்யும் ஸ்தானிக பட்டர்.
சர்வ அலங்காரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி. கம்பத்தடி மண்டபத்தில் கார்த்திகை திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடிக்கு சிறப்பு தீபாராதனை செய்யும் ஸ்தானிக பட்டர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்ச்சியை ஒட்டி காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடைபெற்று சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சுவாமி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்து தர்ப்பை புல், மா இலை, சந்தனம் குங்குமத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் காலை 11.40 மணிக்கு கும்ப லக்னத்தில் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச. 11 ஆம் தேதி பட்டாபிஷேகமும், 12 ஆம் தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் மலைக்கு மேல் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்படும். இதனைத்தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பான் காட்சியும் நடைபெறும்.
திருவிழாவை ஒட்டி, தினமும் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்னவாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com