திருமலையில் திவ்ய தரிசன பக்தர்களுக்காக புதிய காத்திருப்பு அறை

திருமலையில் திவ்ய தரிசன பக்தர்களுக்காக, நவம்பர் முதல் தேதி முதல் காத்திருப்பு அறை தொடங்கப்பட உள்ளது.
திருமலையில் திவ்ய தரிசன பக்தர்களுக்காக புதிய காத்திருப்பு அறை

திருமலையில் திவ்ய தரிசன பக்தர்களுக்காக, நவம்பர் முதல் தேதி முதல் காத்திருப்பு அறை தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது: ஏழுமலையானை நடைபாதை மார்க்கத்தில் வந்து தரிசிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீவாரிமெட்டு, அலிபிரி நடைபாதை மார்க்கத்தில் வரும் பக்தர்கள் தங்கள் உடைமைகளை அளிக்க வேறொரு இடத்துக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தரிசன வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
இதை தவிர்க்கும்பொருட்டு, தற்போது நடைபாதை பக்தர்கள் நுழையும் தரிசன வரிசை அருகில் ஏடிசி (ஆழ்வார் டேங்க் காட்டேஜ்) வாகன நிறுத்தம் அருகில், ரூ. 2.23 கோடி செலவில் தேவஸ்தானம் நடைபாதை பக்தர்களுக்கென திவ்ய தரிசன காத்திருப்பு அறையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு பக்தர்கள் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்தல், காலணிகளை வைத்தல், கூடுதல் லட்டு டோக்கன் பெறுதல், காபி, தேநீர் அருந்தி ஓய்வெடுத்தல் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் செய்து கொள்ள முடியும்.
இந்த காத்திருப்பு அறை, வெள்ளிக்கிழமை காலை பரிசோதனை அளவில் பக்தர்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.
அதிலுள்ள நிறை, குறைகளை ஆராய்ந்த பின் நவம்பர் 1-ஆம் தேதி முதல் முழுமையாக பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com