ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் தேர் திருவிழாவின் ஒன்பதாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் தேர் திருவிழாவின் ஒன்பதாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப். 10) நடைபெறுகிறது.
இக்கோயிலில் பங்குனித் தேர் திருவிழா, கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம்
வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
கடந்த 6ஆம் தேதி உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவையில் காட்சியளித்தார் நம்பெருமாள். விழாவின் ஒன்பதாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவையில் பங்குனி உத்திர மண்டபத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இந்த சேர்த்தி சேவை இரவு 10.30 மணி வரை நடைபெற்றது. பின்னர், சின்னபெருமாள் தீர்த்தவாரி கண்டருளி தாயார் சன்னதி சென்றடைந்தார். 11.30 மணிக்கு இரண்டாம் ஏகாந்தம் தொடங்கியது.
இரவு 12 மணிக்கு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 3 மணி வரை திருமஞ்சனம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நம்பெருமாள் தாயார் சன்னதியிலிருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு தேரில் எழுந்தருளுகிறார். தேர் வடம் பிடித்தல் காலை 7.15 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com