பெரியாயி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா தொடக்கம்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ள பெரியாயி அம்மன் கோயிலில் மூன்றாம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மயானக் கொள்ளை திருவிழாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட பெரியாயி அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்ட பக்தர்கள்.
மயானக் கொள்ளை திருவிழாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட பெரியாயி அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்ட பக்தர்கள்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ள பெரியாயி அம்மன் கோயிலில் மூன்றாம் ஆண்டு மயானக்
கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் எல்லம்பேட்டை கிராமத்தில் கிராம தேவதையான அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சயன கோலத்தில் பெரியாயி அம்மன் கோயில் கட்டப்பட்டது.
ஒவ்வாரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், சித்திரை மாத அமாவாசையையொட்டி, மூன்றாம் ஆண்டு மயானக் கொள்ளை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
5 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், முதல் நாளான செவ்வாய்க்கிழமை யாக பூஜை, கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் விழா தொடங்கியது.
மாலை மணிக்கு, புறக்கூடை, சக்தி கரகம், தீச்சட்டி எடுத்தல், அலகு போடுதல், வாண வேடிக்கையுடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
இரண்டாம் நாளான புதன்கிழமை காலையில் அம்மனுக்கு நலங்கு வைத்தல், சீர்வரிசை எடுத்தல், மயானக் கொள்ளை, வெள்ளாளகண்டி அழித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 10 மணிக்கு உதிரவாய் துடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலமும், கடைசி நாளான சனிக்கிழமை பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினர் செய்துள்ளனர். அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க ஊத்துக்கோட்டை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com