மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வையொட்டி வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு நடைபெற்ற மகா தீபாராதனை.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வையொட்டி வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு நடைபெற்ற மகா தீபாராதனை.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் முக்கியத் திருவிழாவான சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி, மே 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி வாஸ்து சாந்தி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் காப்புக் கட்டி சிறப்பு பூஜைகள் செய்தனர்.
விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. கோயிலின் சுந்தரேசுவரர் சன்னதி முன்பு உள்ள கம்பத்தடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் சுந்தரேசுவரர்-பிரியாவிடை, மீனாட்சியம்மன் எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு புனித நீர் தெளித்து மங்கல இசையுடன் கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி-பிரியாவிடை மற்றும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தீப-தூப ஆராதனைகள் நடைபெற்றன.
கொடிமரத்தை சுவாமி-பிரியாவிடை, அம்மன் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள குலாலர் மண்டகப்பட்டியில் எழுந்தருளினர். கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், கோயில் இணை ஆணையர் ந.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலாம் நாள் விழாவையொட்டி மாலையில் கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், சிம்ம வாகனகத்தில் மீனாட்சியம்மனும் மாசி வீதிகளில் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் மே 5-ஆம் தேதியும், மே 6-இல் திக்குவிஜயம், மே 7-இல் திருக்கல்யாணம், மே 8-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com