வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஸ்ரீரங்கம் அஹோபில மடம் ஜீயர் வருகை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தின் 46-ஆவது பட்டம் ஜீயர் ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த ஸ்ரீரங்கம் அஹோபில மட த்தின் ஜீயர் ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த ஸ்ரீரங்கம் அஹோபில மட த்தின் ஜீயர் ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீரங்கம் அஹோபில மடத்தின் 46-ஆவது பட்டம் ஜீயர் ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகா தேசிக சுவாமிகள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அஹோபில மடத்தின் 46-ஆம் பட்டம் ஜீயருக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜடாரி மரியாதையுடன் சிறப்பு செய்வது வழக்கம்.
அதன்படி வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த ஜீயர் சுவாமிகளுக்கு கோயில் சார்பில், நிர்வாகத்தினர் மரியாதை செய்தனர்.
பின்னர் கோயிலில் உள்ள வரதர், பெருந்தேவி தாயார், நரசிம்மர் உள்ளிட்ட சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்த அவர், ராமானுஜர் அவதார உற்சவத்திலும் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியின்போது, வரதராஜபெருமாள் கோயில் செயல் அலுவலர் விஜயன், தமிழக இந்து அறநிலையத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
சேவாலயாவில்...
திருநின்றவூரை அடுத்த கசுவா கிராமத்தில் இயங்கி வரும் சேவாலயாவில் ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேவாலயா அறங்காவலர் முரளிதன் தலைமையில் நடைபெற இவ்விழாவில்
ஆன்மிக, இலக்கிய சொற்பொழிவாளர் இசைக்கவி ரமணன் பங்கேற்று, ராமானுஜர் குறித்து, பள்ளி மாணவர்களிடையே பேசியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, சாதி வேறுபாடின்றி அனைத்து மக்களும் உய்யுமாறு 'ஓம் நமோ நாராயணா' எனும் எட்டெழுத்து மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்து சமூக நீதியை நிலைநாட்டினார் ராமானுஜர் என்றார்.
முன்னதாக, ஸ்ரீராமானுஜ கைங்கர்ய அறக்கட்டளையிலிருந்து, ஸ்ரீராமானுஜர் திருவுருவச்சிலை, வேதகோஷங்களுடன் சேவாலயாவுக்கு கொண்டு வரப்பட்டு, திருநின்றவூர் பக்தவச்சலப் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார் மணிவண்ணனால் வழிபாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீராமானுஜ கைங்கர்ய அறக்கட்டளை அறங்காவலர்கள் மனோகரன், வேங்கடராமன், மோகன், சேகர், சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் கிங்ஸ்டன் நன்றி கூறினார்.

ஸ்ரீராமானுஜர் 1000-ஆவது ஜயந்தி விழாவில் பங்கேற்ற இசைக்கவி ரமணன், சேவாலயா நிர்வாக அறங்காவலர் முரளிதரன் உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com