தொழுவூர் மாரியம்மன் கோயில் திருவிழா

திருவள்ளூரை அடுத்த தொழுவூரில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில், சனிக்கிழமை இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொழுவூரில், சனிக்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த ஓம்சக்தி மாரியம்மன்.

தொழுவூரில் பழைமை வாய்ந்த ஓம்சக்தி எல்லையம்மன் என்றழைக்கப்படும் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 11}ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து, கூழ்வார்த்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு அம்மன் சிறப்பு மலர் மற்றும் மின் விளக்குகள் அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது, தெருக்கூத்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தொழுவூர், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் கடைசி நாளான வரும் 20}ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com