பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சதுர்த்தி விழா கொடியேற்றம்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சதுர்த்தி விழா கொடியேற்றம்.

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கொடியேற்றம்

பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி காலை 10.10 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்ட வெண்கொடி கோயிலைச் சுற்றி எடுத்துவரப்பட்டது. பின்னர் கொடி மரம் மற்றும் அங்குசத் தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயகர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 2-ஆம் நாளான வியாழன் முதல் 8 -ஆம் திருநாள் வரை ஒவ்வொரு நாளும் காலையில் உற்சவர் வெள்ளி கேடகத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.
வீதி உலாவின்போது திருமறை பாராயணமும், திருமுறை பாராயணமும் நடைபெறுகிறது. விழாவின் முத்தாய்ப்பாக வரும் 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) தேரோட்டமும், அன்றைய தினம் இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளன.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி அன்று காலை குளக்கரையில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் நச்சாந்துபட்டி அழ.பெரியகருப்பன் செட்டியார், காரைக்குடி ரா.ம.நாராயணன் என்ற மகாதேவன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com