ஏழுமலையான் கோயிலில் செப்.23 முதல் வருடாந்திர பிரம்மோற்சவம்: சுவரொட்டி வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 23-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதற்கான சுவரொட்டியை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் திங்கள்கிழமை வெளியிட்டது.
வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான சுவரொட்டியை வெளியிட்ட தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள்.
வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கான சுவரொட்டியை வெளியிட்ட தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 23-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இதற்கான சுவரொட்டியை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் திங்கள்கிழமை வெளியிட்டது.
திருமலையில் புரட்டாசி மாதம் நவராத்திரியின்போது, ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
இதற்காக திருமலை மாடவீதியில் கேலரிகள் அமைத்தல், மாடவீதியில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் தனித்தனி வழிகள், திருக்குளத்தை சுத்தப்படுத்துதல், வெள்ளையடித்தல், மாடவீதியில் வண்ண கோலமிடுதல், குழாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை செப்டம்பர் 27-ஆம் தேதியும், தங்கத்தேரோட்டம் 28-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
இம்முறை பிரம்மோற்சவ வாகன சேவையின்போது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வ பூபால வாகனம் இடம்பெற உள்ளன.
இந்நிலையில், திருமலை அன்னமய்யபவனில் வருடாந்திர பிரம்மோற்சவ சுவரொட்டி வெளியிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு, சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, தலைமை அர்ச்சகர் ரமணதீட்சிதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சுவரொட்டியை வெளியிட்டனர்.
நரசிம்ம தீட்சிதர், திருப்பதி செயல் அதிகாரி போலா பாஸ்கர், கண்காணிப்புத்துறை அதிகாரி ரவிகிருஷ்ணா உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com