சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற அபிஷேகம்.
சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற அபிஷேகம்.

அருணாசலேஸ்வரர் கோயிலில் நேரடி நெய் விற்பனை தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான நேரடி நெய் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான நேரடி நெய் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
மகா தீபம் ஏற்றத் தேவையான நெய்யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் தீபத் திருவிழாவின்போது நேரடி நெய் விற்பனை கோயிலில் தொடங்கப்படும்.
அதன்படி, நிகழாண்டுக்கான தீபத் திருவிழா நேரடி நெய் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் நேரடி நெய் விற்பனையை தொடக்கிவைத்தார் .
ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்பும் நெய் காணிக்கைக்கு ஏற்றபடி தொகையை செலுத்தி, தங்கள் கைகளாலேயே நெய் காணிக்கை செலுத்தலாம்.
தீபத் திருவிழா நடைபெறும் வரும் சனிக்கிழமை (டிசம்பர் 2) வரை இந்த நேரடி நெய் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com