மகா சிவராத்திரி: பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வலையபட்டியில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் பூசாரி சுப்பிரமணியன்.

ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை குலவிளக்கு ஏற்றி மகா சிவராத்திரி விழா தொடங்கியது.
இதையடுத்து சனிக்கிழமை ஸ்ரீமகாலட்சுமி அம்மன் பூப்பல்லக்கில் துறைமுகம் சென்று அடைந்ததும் அங்கு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயில் பூசாரி சுப்பிரமணியன் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com