திருத்தணி முருகர் திருவீதி உலா

காணும் பொங்கலை முன்னிட்டு, திங்கள்கிழமை திருத்தணி முருகர் கோயில் உற்சவர் நகர வீதிகளில் திருவீதி உலா வந்தார்.
திருத்தணியில் வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்.
திருத்தணியில் வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகப்பெருமான்.

காணும் பொங்கலை முன்னிட்டு, திங்கள்கிழமை திருத்தணி முருகர் கோயில் உற்சவர் நகர வீதிகளில் திருவீதி உலா வந்தார்.
ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி மூன்று நாட்கள் உற்சவ முருகர், மலைக் கோயில் வளாகத்திலிருந்து இறங்கி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
இதன்படி, பொங்கல் நாளன்று (சனிக்கிழமை) மலைக்கோயில் பின்புறம் உள்ள அர்ச்சகர்கள் வசிக்கும் பகுதிகளில் உற்சவர் வலம் வந்தார். ஞாயிற்றுக்கிழமை மேல் திருத்தணி பகுதியில் உள்ள சாலைகளில் வீதியுலா வந்தார்.
காணும் பொங்கல் தினமான திங்கள்கிழமை உற்சவர் நகரில் வீதியுலா வந்தார். இதை முன்னிட்டு, அதிகாலை 5 மணிக்கு கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு உற்சவர், வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக சரணவப்பொய்கையை அடைந்தார்.
பின்னர், சந்நிதி தெரு, பெரிய தெரு, பஜார் தெரு, காந்தி சாலை வழியாக மாலை 6 மணிக்கு ரெட்டிகுளம் வந்தடைந்தார். அங்குள்ள மண்டபத்தில் உற்சவருக்கு பால், பன்னீர், தேன், விபூதி உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தீபாராதனை நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com