மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழா: அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் நிறைவாக ஆற்றுத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரிக்காக, வரிசையாகக் கொண்டுவரப்பட்ட சுற்றுப்பகுதி கோயில்களின் உற்சவ மூர்த்திகள்.
மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரிக்காக, வரிசையாகக் கொண்டுவரப்பட்ட சுற்றுப்பகுதி கோயில்களின் உற்சவ மூர்த்திகள்.

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் நிறைவாக ஆற்றுத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, ஆற்றுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விழுப்புரம் அருகே பிடாகம்-அத்தியூர்திருவாதி தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பொது மக்கள் திரண்டனர்.
ஆற்றில் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, அலங்கரித்து, சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
ஆற்றில் தண்ணீர் இல்லாததால், வெளியிலிருந்து, தண்ணீர் கொண்டு வந்து பூஜைகள் செய்யப்பட்டன.
இதே போல, பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில், திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் வந்திருந்தனர். பரிக்கல் லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட ஏராளமான கோயில்களிலிருந்து சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றனர்.
திருக்கோவிலூரில்... திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர், திருக்கோவிலூர்-ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர், அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர், வீரபாண்டி அதுல்யநாதேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் வந்தன.
தீர்த்தவாரி நிகழ்ச்சியில் விக்னேஸ்வரர் பூஜை, கலச பூஜை, பஞ்ச சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, விசேஷ திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, ஸ்ரீருத்ர மகா அபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் அனைவரும் சிவபுராணம், நமச்சிவாய மந்திரங்கள் முழங்க, தீர்த்தவாரி நடைபெற்று, பக்தர்கள் புனித நீராடினர்.
மணலூர்பேட்டையில்... மணலூர்பேட்டையில் நடைபெற்ற தென்பெண்ணையாற்றுத் திருவிழாவில், லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
இங்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், மணலூர்பேட்டை வரதராஜ பெருமாள், மாவடி விநாயகர், கங்கையம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளின.
விழாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு மக்கள் அதிகளவில் திரண்டனர். பாதுகாப்புப் பணியில் அதிகளவில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com