தமிழகத்தில் ராமானுஜர் ரத யாத்திரை: காட்பாடிக்கு நாளை வருகை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ராமானுஜர் சஞ்சார ரத யாத்திரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ராமானுஜர் ரத யாத்திரை: காட்பாடிக்கு நாளை வருகை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ராமானுஜர் சஞ்சார ரத யாத்திரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஆண்டு மே 10-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 108 திவ்ய தேசங்களுக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் ராமானுஜர் உற்சவ சிலைகள் கொண்ட சஞ்சார ரத யாத்திரையை மேற்கொண்டது. அங்கு கல்யாண உற்சவம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் நடத்தியது. தற்போது இந்த ரதம் ஜனவரி 25 முதல் 31-ஆம் தேதி வரை 7 நாள்கள் தமிழகத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளது.
அதன்படி வரும் 25-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பதியிலிருந்து புறப்படும் இந்த ரதம் வேலூர், காட்பாடி வழியாக தஞ்சாவூரை சென்றடைகிறது.
26-ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள தஞ்சை மாமணி கோயிலில் உள்ள நீளமேகப் பெருமாள் கோயில், திருக்கூடலூரில் உள்ள ஆடுதுறை பெருமாள் கோயில், திருக்குவிதுளமில் உள்ள கஜேந்திர வரத பெருமாள் கோயிலுக்கு செல்கிறது.
27-ஆம் தேதி திருபுல்லம் பூதங்குடியில் உள்ள வல்வில் ராமர் பெருமாள் கோயில், திருஆதனூரில் உள்ள ஆண்டளக்கும் அய்யன் பெருமாள் கோயில், திருக்கூடந்தியில் உள்ள சாரங்கபாணி பெருமாள் கோயில், திருவிண்ணகரில் உள்ள ஒப்பிலியப்பன் பெருமாள் கோயில்களுக்கு செல்கிறது.
28-ஆம் தேதி திருநரையூரில் உள்ள திருநரையூர் நம்பி பெருமாள் கோயில், திருச்செரையூரில் உள்ள சாரநாதப் பெருமாள் கோயில், திருகண்ணமங்கையில் உள்ள பக்தவச்ல பெருமாள் கோயில், திருநந்திபுர விண்ணகரத்தில் உள்ள ஜெகன்நாத பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று இரவு நாகபட்டினத்தை அடைகிறது.
29-ஆம் தேதி நாகபட்டினம் திருவெள்ளியங்குடியில் உள்ள கோல வல்வில்லி ராமர் கோயில், திருத்தாழைசங்கநாண்மதியத்தில் உள்ள நாண்மதிய பெருமாள் கோயில், திருக்கண்ணங்குடியில் உள்ள லோகநாத பெருமாள் கோயில், திருநாகையில் உள்ள சௌந்திரராஜ நீலமேகப் பெருமாள் கோயிலுக்கு செல்கிறது. 30-ஆம் தேதி திருகண்ணபுரத்தில் உள்ள சௌரிராஜ நீலமேகப் பெருமாள் கோயில், திருசிறுபுலியாரில் உள்ள அருளாமக்கடல் பெருமாள் கோயில், திருவலியந்தூரில் உள்ள தேவாதிராஜ பெருமாள் கோயில், திருஇந்தளூரில் உள்ள பரிமளராஜ ரங்கநாத பெருமாள் கோயிலுக்குச் சென்று விட்டு, ஜனவரி 31-ஆம் தேதி இந்த ரதம் திருப்பதியை அடைகிறது.
திருக்கல்யாண உற்சவங்கள்...
ராமானுஜ சஞ்சார ரதம் தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் உள்ள 20 திவ்ய தேசங்களில் பயணிக்க உள்ளது. இதில், ஜனவரி 25-ஆம் தேதி காட்பாடியிலும், ஜனவரி 27-ஆம் தேதி தஞ்சாவூரிலும், ஜனவரி 29-ஆம் தேதி நாகபட்டினத்திலும், ஜனவரி 31-ஆம் தேதி ஆடுதுறையில் உள்ள திருமங்கலக்குடியிலும் சீனிவாச கல்யாண உற்சவங்கள் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com