கோதண்ட ராமர் கோயில் சம்ப்ரோக்ஷணம்

கும்மிடிப்பூண்டி யை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள கோதண்ட ராமர் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
கோதண்ட ராமர் ஆலயத்தின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா நடத்தப்பட்ட கும்பாபிஷேகம். (வலது) கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினர்.

இதனை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை யாக சாலை பூஜை பூர்ணாஹுதி, மகாதீபாராதனை, கும்பப் புறப்பாடு, யாத்ரா தானம் நடைபெற்றன. பின்னர் பட்டாச்சாரியாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சீதா, லஷ்மணன், அனுமன் சமேத கோதண்ட ராமசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் விநியோகிக்கப்பட்டது. மாலையில் உற்சவமூர்த்திகள் திருவீதி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com