சதுரகிரியில் லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மலைக்கு தாணிப்பாறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தாணிப்பாறையிலிருந்து சதுரகிரி மலை கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பக்தர்கள்.
தாணிப்பாறையிலிருந்து சதுரகிரி மலை கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பக்தர்கள்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மலைக்கு தாணிப்பாறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சதுரகிரி மலையில் அருள்மிகு சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
இங்குள்ள மலைகளில் 18 சித்தர்களில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மலையில் வாசம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களில், கோரக்க சித்தர் வாழ்ந்த மலையில் அனைவரும் ஒன்று கூடி சிவபெருமானை காண்பதற்காக வேள்விகள் நடத்தியதாகவும், வேண்டுதலுக்கு மனமிறங்கிய சிவபெருமான் ஆடி அமாவாசை தினத்தில் இங்கு வந்து நேரில் காட்சி கொடுத்ததாகவும் ஐதீகம்.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். நிகழாண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு ஜூலை 20 முதல் 25 வரை மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் சதுரகிரிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்கிரீட அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதே போல் சந்தன மகாலிங்கம் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மலைப்பாதையில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க மாங்கனி ஓடை, வழுக்குப் பாறை, சங்கிலிப் பாறை, படிவெட்டப் பாறை, பசுக்கடை, பிலாவடிகருப்பு கோயில் முதலான இடங்களில் போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தாணிப்பாறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com