வீரராகவ பெருமாள் கோயில் உண்டியல் வசூல் ரூ.25.39 லட்சம்

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் ரூ.25.39 லட்சம், 98 கிராம் தங்கம் ஆகியவை பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தது.
வீரராகவ பெருமாள் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் மாதந்தோறும் அமாவாசைக்கு மறுநாள் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயிலின் கௌரவ ஏஜென்ட் சம்பத் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மொத்தம் 140-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, 25 லட்சத்து 39 ஆயிரத்து 500 ரொக்கம் மற்றும் 98 கிராம் தங்கம் ஆகியவை பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com