5-இல் காஞ்சி கைலாசநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா திங்கள்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
5-இல் காஞ்சி கைலாசநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா திங்கள்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
எட்டாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவமன்னர் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் கர்ப்பக் கிரகத்தின் இடது புறம் மரண வாசலும், வலது புரம் ஜனன வாசலும் கொண்டு சிறப்பான சிற்பக்கலை அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் கைலாசநாதர், நாரதேஸ்வரர் என இரு சிவ லிங்கங்களும் தாராலிங்க அமைப்புப்படி 16 பட்டைகளுடன் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் பராமரிப்பில், தமிழக இந்துசமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இக்கோயில் தற்போது புதுப்பிக்கப்பட்டு, வரும் திங்கள்கிழமை (ஜூன் 5) மதியம் 12 மணிக்கு மேல் 12.30க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு மே 29ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. சனிக்கிழமை காலை 9 மணிக்கு 2-ஆம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மாலை 4.15 மணிக்கு ஐந்தாம் கால யாகபூஜைகள் மகா பூர்ணாஹுதியுடன் நடைபெறுகின்றன. 5ஆம் தேதி காலை 9.05 மணிக்கு அவப்ருத யாகமும் 11 மணிக்கு மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், 11.30 மணிக்கு கடம் புறப்பாடு, 12.05 மணிக்கு விமான கும்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து அனைத்து மூர்த்தங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை க.ராஜப்பா சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தி வைக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, தொல்பொருள் ஆய்வுத் துறை, உபயதாரர்கள் உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com