திருப்பதியில் இனி இணையதள குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவா டிக்கெட்

திருப்பதியில் இனி இணையதள குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருப்பதியில் இனி இணையதள குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவா டிக்கெட்

திருப்பதியில் இனி இணையதள குலுக்கல் முறையில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருமலை அன்னமய்யபவனில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தொலைபேசியில் தொடர்புகொண்ட பக்தர்களின் கேள்விகளுக்கு அனில்குமார் சிங்கால் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குலுக்கல் முறை: ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டவுடன் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுவதால் கிராமப்புறத்தில் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்ய முடியாமல் போகிறது.
எனவே, வரும் 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் செப்டம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
இந்த டிக்கெட்டுகளை வேண்டுவோர் டிக்கெட் வெளியிடப்பட்ட 3 நாள்களுக்குள் தங்களது பெயர், ஆர்ஜித சேவையின் பெயர், டிக்கெட் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை தேவஸ்தான இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு வரப்பெற்றுள்ள விண்ணப்பங்களை குலுக்கல் முறையில் தேவஸ்தானம் தேர்ந்தெடுத்து, அதற்குரிய நபர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும்.
வாடகை அறை: இணையதளம் மூலம் திருமலையில் வாடகை அறைகளை முன்பதிவு செய்யும் பக்தர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ரத்து செய்தால், அவர்கள் செலுத்திய பணம் திருப்பி அளிக்கப்படும்.
மேலும், வாடகை அறையை காலி செய்ய வேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே காலி செய்யும் பக்தர்களுக்கு, வாடகையில் ஒரு பகுதி திருப்பி அளிக்கப்படும். இதற்கான மென்பொருள் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இந்த வசதி அமல்படுத்தப்பட உள்ளது.
தரிசனம்: கடந்த ஆண்டு மே மாதம் 23.34 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்தனர். இந்த ஆண்டு மே மாதத்தில் 26.55 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கும் சரியான நேரத்துக்கு அன்னதானம், சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
காத்திருப்பு அறைகளில் காத்திருக்கும் பக்தர்களின் கைக் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பால் வழங்கும் முறை ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தாய்மார்களுக்கு உப்புமா, பொங்கல் உள்ளிட்ட சிற்றுண்டிகள் வழங்கவும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
உதவி மையம்: காத்திருப்பு அறைகளில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க அனைத்து அறைகளிலும் உதவி மையம் ஏற்படுத்தப்படும். பக்தர்கள் காத்திருப்பு அறைகளிலிருந்து தங்களது உறவினர்களை தொடர்புகொள்ள இலவச தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும். இதேபோல், தரிசன நேரத்தை தெரிந்து கொள்ள மின்னணு தகவல் பலகை ஏற்படுத்தப்படும்.
தேவஸ்தானம் புதிதாக அறிமுகப்படுத்திய 'கோவிந்தா' என்ற செல்லிடப்பேசி செயலி மூலம் கடந்த 2 மாதங்களில் 24,350 பக்தர்கள் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்து ஏழுமலையானைத் தரிசித்துள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com