60 ஆண்டுகளுக்கு பிறகு செங்கல்பட்டு சோமாஸ்கந்தர் சிலைக்கு வழிபாடு

திருப்போரூர் கந்தசாமி கோயிலில், ஐம்பொன்னால் ஆன சோமாஸ்கந்தர் சிலை 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.
திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மீண்டும் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள உற்சவர் சோமாஸ்கந்தர் மூர்த்திகள்.
திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மீண்டும் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள உற்சவர் சோமாஸ்கந்தர் மூர்த்திகள்.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில், ஐம்பொன்னால் ஆன சோமாஸ்கந்தர் சிலை 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.

கந்தசாமி கோயில் நிர்வாகத்தினரால் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த சிலை மாயமாகிவிட்டதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் பரவியது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கோயிலில் ஆய்வு செய்தனர்.

அப்போது, சோமாஸ்கந்தர் சிலை பத்திரமாக இருந்ததும், மாயமாகி விட்டதாக கூறப்படும் தகவல் வதந்தி என்பதும் உறுதியானது. இந்நிலையில், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முக மணி, வேலூர் துணை ஆணையரும், சரிபார்ப்பு அலுவலருமான தனபால், ஆய்வுக் குழுவினர் முன்னிலையில் சிவன், பார்வதியுடன் சோமாஸ்கந்தர் சிலை பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் நற்சோனை கூறியதாவது: சோமாஸ்கந்தர் சிலை பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த சிலை 6 அங்குலம் உயரம் குறைவாக இருந்தது. இதனால், கேட்டிற்குள் கைவிட்டு யாராவது எடுத்துச் சென்றுவிடும் சூழல் இருந்தது.

இதனால், சோமாஸ்கந்தர் சிலை மட்டும் பாதுகாப்புப் பெட்டகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சம்பத்குமார் ரூ. 2.50 லட்சம் செலவில் பஞ்சலோகத்தால் ஆன பீடத்தை ஏற்படுத்தித் தர முன்வந்தார்.

அதன்படி, கருவறைக்கு பின்புறம் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில், சோமாஸ்கந்தர் சிலையை மீண்டும் வழிபாட்டுக்காக வைத்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com