ராமானுஜர் சந்நிதி தங்க விமானத்தை தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, ஆதிகேஷவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் உள்ள ராமானுஜர் சந்நிதியின் தங்க விமானத்தைத் தூய்மைப்படுத்தும் பணி
ராமானுஜர் சந்நிதி தங்க விமானத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
ராமானுஜர் சந்நிதி தங்க விமானத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவை முன்னிட்டு, ஆதிகேஷவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் உள்ள ராமானுஜர் சந்நிதியின் தங்க விமானத்தைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேஷவப் பெருமாள், பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள்பாலித்து வருகிறார். ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு அவதார உற்சவம் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதையொட்டி, ராமானுஜர் கோயிலில் உள்ள சிற்பங்கள், மண்டபங்கள் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக ராமானுஜர் சந்நிதியின் தங்க விமானத்தை புளி மற்றும் பூந்திக்கொட்டை கலவைகள் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மூலம் தூய்மைப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com