ராமானுஜர் 1000-ஆவது ஆண்டு விழா: குடிநீர்த் தொட்டி, தாற்காலிகக் கழிப்பறைகள் அமைக்க முடிவு

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில், 30 தாற்காலிகக் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்யப்

ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில், 30 தாற்காலிகக் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள், பாஷ்யகார சுவாமி கோயிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக (உற்சவர்) அருள் பாலித்து வருகின்றார்.
ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி உற்சவம் ஏப்ரல் 21 தொடங்கி மே 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மே 3 முதல் 6-ஆம் தேதி வரை தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.
இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில் 30 இடங்களில் நடமாடும் தாற்காலிக கழிப்பறைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக திருவண்ணாமலை நகராட்சியில் இருந்து நடமாடும் 30 கழிப்பறைகளை வாடகைக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கழிப்பறைகள், தேரடி தெரு, சென்னை பிரதான சாலை ஆர்ச், ஜி.டபிள்யு.டி சாலை ஆர்ச், திருவள்ளூர் சாலை ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
வாகன நிறுத்துமிடம்: பக்தர்களின் வாகனங்களை நிறுத்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை பிரதான சாலை ஆர்ச், ஜி.டபிள்யு.டி சாலை ஆர்ச், திருவள்ளூர் சாலையில் நுஷ்ரத் நகர் அருகே தாற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைய உள்ளன.
தாற்காலிக குடிநீர் தொட்டிகள்: ஆதிகேசவப் பெருமாள் கோயில், நூற்றுக்கால் மண்டபம், மாணவாள மாமுனிகள் கோயில் தெரு, காந்தி சாலை-மணவாள மாமுனிகள் கோயில் தெரு சந்திப்பு, திருமங்கை ஆழ்வார் தெரு-சந்நிதி தெரு சந்திப்பு, தேரடி தெரு, சென்னை பிரசான சாலை ஆர்ச், ஜி.டபிள்யு.டி சாலை ஆர்ச், திருவள்ளூர் சாலையில் நுஷ்ரத் நகர், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் என மொத்தம் 13 இடங்களில் சுத்திகரிக்கப்பட்டக் குடிநீர் தொட்டிகள் அமைக்க பேரூராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com